தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா நடித்துள்ள படம் குபேரா. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள குபேரா படம் நாளை திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ள சென்சார் போர்டு, 19 இடங்களில் சர்ச்சைக்குரிய காட்சிகள் வசனங்கள் இருப்பதாக சொல்லி கட் கொடுத்துள்ளது. அதையடுத்து குபேரா படம் 3 மணி நேரம் 03 நிமிடங்கள் ரன்னிங் டைம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள தாராவியை மையமாக கொண்டு அரசியல் கலந்த திரில்லர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில், கதைப்படி பிச்சைக்காரனாக நடித்துள்ள தனுஷ், இந்த சமூக அவலங்களை நோக்கி சாடும் பல அதிரடியான காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாம்.