டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ரெய்டு படத்திற்கு பிறகு சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் லவ் மேரேஜ். இந்த படத்தில் அவருடன் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக் , அருள்தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, சத்யராஜ் எம்எல்ஏவாக ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற ஜூன் 27ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். விக்ரம் பிரபுவிற்கு ஏகப்பட்ட பெண்கள் பார்த்து ஏதாவது ஒரு காரணங்களால் திருமணம் தடைபடுகிறது. அவரின் திருமணத்தை வைத்து இந்த படத்தின் கதை இருக்கும் என டிரைலரை பார்க்கையில் தெரிகிறது. காமெடி கலந்த உணர்வுப்பூர்வமான குடும்ப படமாக இருக்கும் என தெரிகிறது.
மேலும், இந்தப் படத்தை அடுத்து அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்துள்ள காட்டி என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு. இந்த படம் வருகிற ஜூலை 11ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




