இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

'மண்வாசனை' படம் மூலம் நடிகையாக அறிமுகமான ரேவதி, பின்னர் இயக்குனராகவும் ஆனார். அவர் இயக்கிய 'மித்ரூ மை பிரண்ட்' படம் பல விருதுகளை பெற்று கொடுத்து, அவருக்கு தரமான இயக்குனர் என்ற அங்கீகாரத்தை கொடுத்தது. அதன் பிறகு பல படங்களை இயக்கிய அவர் தற்போது இயக்கி உள்ள வெப் தொடர் 'குட் வொய்ப்' (நல்ல மனைவி). இதில் பிரியாமணி, சம்பத் ராஜ் நடித்துள்ளனர். இது இந்தியில் வெளியான தொடரின் ரீமேக் ஆகும்.
இதுகுறித்து ரேவதி கூறும்போது "இந்தி ரீமேக்கில் 'குட் வொய்ப்' வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து தமிழில் இதனை இயக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்தக் கதையில் கதாநாயகி கதாபாத்திரம் மிகவும் வலுவானது. தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் தொழில் சார்ந்தும் நிறைய சவால்களை அவர் எதிர்கொள்கிறார். இதனை படமாக்குவதை மிகவும் விரும்பி செய்தேன். பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் போன்ற திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் பானிஜே ஆசியாவுடன் ஓடிடி உலகில் நான் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சிகரமான அனுபவம்” என்றார். இந்த தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.