தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'குபேரா' படம் நாளை மறுதினம் ஜுன் 20ம் தேதி பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
தமிழில் இப்படத்திற்கான ஆன்லைன் முன்பதிவு மிகவும் சுமாராக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக தனுஷ் நடித்து வெளிவரும் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சியான 9 மணி காட்சிக்கு ஏறக்குறைய அனைத்து தியேட்டர்களிலும் முன்பதிவு மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால், இந்தப் படத்திற்கு அப்படியில்லாமல் இருக்கிறது.
தெலுங்கு இயக்குனர் படத்தை இயக்கியுள்ளதால் தெலுங்குப் படம் போலவே இருக்குமோ என்ற சந்தேகம் தனுஷ் ரசிகர்களுக்கே வந்துள்ளது போல இருக்கிறது. சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் முதல் மூன்று நாட்களுக்கான முன்பதிவு தற்போதைய நிலவரப்படி அதிர்ச்சியாகவே உள்ளது.
அதே சமயம் தெலுங்கில் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இப்படத்திற்கான முன்பதிவு குறிப்பிடும்படி இருக்கிறது. சென்னையை விட ஹைதராபாத்தில் முதல் நாள் முதல் காட்சிக்கான முன்பதிவு மிகச் சிறப்பாக இருக்கிறது.
ஹிந்தியில் மும்பை உள்ளிட்ட மாநகரங்களில் ஒரு சில தியேட்டர்களில்தான் முன்பதிவு ஆரம்பமாகி உள்ளது.
சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இப்படத்திற்கான விழாக்கள் நடைபெற்றன. அவை முன்பதிவுக்கு போதவில்லை என்றே தெரிகிறது. படம் வெளிவந்த பின்பு எப்படியிருக்கிறது என்பதைப் பார்த்து முன்பதிவு ஆகவும் வாய்ப்புள்ளது.
தமிழில் அடுத்தடுத்து சில முக்கிய படங்களின் தோல்விகள் தமிழ் ரசிகர்களிடையே படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டவில்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.