Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி

14 ஜூன், 2025 - 01:59 IST
எழுத்தின் அளவு:
Judge-unhappy-with-Kamal-for-not-apologizing

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' படம் கடந்த 5ம் தேதி வெளியானது. இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் 'தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது' என்றார். அவரின் இந்த கருத்துக்கு கர்நாடகத்தில் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. அந்த மாநில முதல்வரே கமல்ஹாசன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

கமல்ஹாசன் தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனால் 'தக் லைப்' படத்தை கர்நாடகத்தில் வெளியிட அந்த மாநில வர்த்தக சபை தடை விதித்தது.

இதை எதிர்த்து கர்நாடகத்தில் 'தக் லைப்' படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கமல்ஹாசனை கடுமையாக சாடினார். எந்த அடிப்படையில் தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது? என்று சொன்னீர்கள், அதற்கு ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். மன்னிப்பு கேட்கும்படி நீதிபதி அறிவுரை கூறினார். ஆனால் கமல்ஹாசன், மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதி 'கமல்ஹாசன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லையா?' என்று கேட்டார். அதற்கு வழக்கறிஞர் கமல்ஹாசன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை என்று பதிலளித்தார்.

அதன்பிறகு வழக்கு விசாரணையை வருகிற 20ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி அதுவரை படத்தை கர்நாடகத்தில் வெளியிட தடை விதித்தார்.

உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
இதற்கிடையில் மகேஷ் ரெட்டி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் "கர்நாடகத்தில் 'தக் லைப்' படத்திற்கு கன்னட சினிமா வர்த்தக சபை தடை விதித்துள்ளதாகவும், இது நீதித்துறையின் அதிகாரத்தை மீறியது ஆகும் என்றும், அதனால் இந்த தடையை நீக்கி படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும்" கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் கர்நாடக அரசு, கன்னட சினிமா வர்த்தக சபைக்கு 'தக் லைப் படத்திற்கு எந்த அடிப்படையில் தடை விதிக்கப்பட்டது' என்று விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அதோடு வழக்கின் அவசரத்தன்மை கருதியே இந்த நோட்டீஸ் அனுப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஆயிரமாவது பாடலை எழுதிய மதன் கார்க்கிஆயிரமாவது பாடலை எழுதிய மதன் கார்க்கி பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் பிளாஷ்பேக் : அழகும், குரலும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
14 ஜூன், 2025 - 07:06 Report Abuse
Sridhar அந்த ஆளு உண்மையாவே நீதிபதிதானா? உங்க முன்னால உள்ள வழக்க விசாரின்னா, மன்னிப்பு கின்னிப்புனு எதோ சம்பந்தமில்லாம பேசினத்தோட மட்டுமில்லாம நாட்டுநடப்பே சுத்தமா தெரியாம இன்னும் மன்னிப்பு கேக்கலையான்னு வேற , சினிமா வர்த்தகசபைக்கு தடைவிதிக்க அதிகாரம் இருக்கா இல்லையா அதுதான் கேள்வி மத்தபடி அந்த ஆளு சொன்ன விஷயம் உண்மையா பொய்யான்னு ஆராய்வதற்கு வேற யாராவது புதுசா வழக்கு போட்டா அப்போ பாக்கலாம். செந்தில் வடிவேலு ரேஞ்சுல வேலைபாக்குறார் இந்த ஆளு??
Rate this:
14 ஜூன், 2025 - 11:06Report Abuse
சேகர் இந்த வழக்கு வர்த்தக சபைக்கு அதிகாரம் உள்ளதா என விசாரிக்க அல்ல. கமல் கேட்பது கர்நாடக அரசு பட ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்பது. கர்நாடக அரசு மொழி உணர்வை தூண்டுவதால் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்கிறது. இந்த பிரச்சனையில் கர்நாடக நிலைபாட்டில் நியாயம் இருப்பதாக நீதிபதி கருதுவதால் கமலை மன்னிப்பு கேட்க சொல்கிறார் நீதிபதி. கமல் இன்னும் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என சொல்லவில்லை. கால அவகாசம் கேட்கிறார் கமல். ஆகவே தீர்ப்பு தராமல் மனுதாரரின் முடிவான நிலைப்பாடு என்ன என நீதி மன்றம் காத்திருக்கிறது. இது சிவில் வழக்கு. மனுதாரருக்கே அவசரம் இல்லாத போது நீதி மன்றம் ஏன் அவசர அவசரமாக தீர்ப்பு வழங்க வேண்டும்?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in