'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
திருவள்ளுவர் வாழ்க்கை வரலாற்றை திருக்குறள் என்ற பெயரில் படமாக எடுக்கிறார் ஏ.ஜே.பாலகிருஷ்ணன். இவர் ஏற்கனவே காமராஜர் வாழ்க்கையை சினிமாவாக்கி, பாராட்டு பெற்றவர். இதில் புதுமுகம் கலைச்சோழன் திருவள்ளுவராகவும், புதுமுக தன லட்சுமி வாசுகியாகவும் வருகிறார்கள். இதை விட முக்கியமாக பல படங்களில் காமெடியனாக நடித்த கொட்டாச்சி, புலவர் பெருந்தலை சாத்தனாராக வருகிறார். இயக்குனர் சுப்ரமணியம் சிவா, நக்கீரராக நடித்துள்ளார். தங்கள் கெட்அப் போட்டோக்களை இவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த படத்தில் பல போர்க்கள காட்சிகளும், அரசவை காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. திருக்குறள் படத்தை தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் டப் செய்து வெளியிட வேண்டும். திருவள்ளுவர் வரலாற்றை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால், இளையராஜா இசையமைத்து இருக்கும் இந்த படத்துக்கு தமிழக அரசு வியாபாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் உதவ வேண்டும் என்பது படக்குழு விருப்பமாக இருக்கிறது.