டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன் நடித்து வெளிவந்த 'டூரிஸ்ட் பேமிலி' படம் தமிழ் சினிமா பிரபலங்களை மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னட சினிமா பிரபலங்களையும் வெகுவாகக் கவர்ந்தது. ரஜினிகாந்த், ராஜமவுலி, கிச்சா சுதீப் உள்ளிட்டவர்கள் படத்தைப் பார்த்து பாராட்டி இருந்தனர். அவர்களுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்திருந்தனர்.
படத்தின் இயக்குனர் அபிஷன், நடிகர் நானியை சந்தித்து அதற்கு நன்றி தெரிவித்துள்ளார். “என்ன ஒரு நாள். உங்களை சந்தித்ததில் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன் நானி சார். நீங்கள் மிகவும் பணிவான, எளிமையான மனிதர். படத்தைப் பற்றி இவ்வளவு விரிவாகப் பேசிய விதம், எனக்கு மேலும் சிறப்பானதாக அமைந்தது, நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஓடிடியில் வெளிவந்த பிறகு 'டூரிஸ்ட் பேமிலி' படத்தைப் பலரும் பார்த்து வருகிறார்கள். தியேட்டர்களில் வெளியாகி 75 கோடி வசூலைப் பெற்று இந்த ஆண்டின் அதிக வசூல் லாபம் பெற்ற படங்களில் ஒன்றாக இந்தப் படம் அமைந்தது.




