தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? |
தமிழ் சினிமாவில் பல புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியதில் கமல்ஹாசனும் முக்கியமானவர். அந்தக் காலத்திலிருந்தே அவருடைய படங்கள் வியாபார ரீதியாக சரியாக ஓடவில்லை என்றாலும் கூட கிண்டலடிக்கப்பட்ட சம்பவம் நடந்ததில்லை. அவரது தோல்விப் படங்கள் கூட இப்போதும் பேசப்படும் படங்களாக இருக்கும். அதற்கு சில உதாரணங்களைச் சொல்லலாம்.
ஆனால், அவர் நடித்து கடைசியாக வெளிவந்த இரண்டு படங்களான 'இந்தியன் 2, தக் லைப்' ஆகிய படங்கள் வியாபார ரீதியாக தோல்வியாக அமைந்தவை. ஆனாலும், அந்தப் படங்கள் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டதுதான் நிகழ்ந்தது. இத்தனைக்கும் அந்த இரண்டு படங்களையும் இயக்கியவர்கள் தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்களான ஷங்கர், மணிரத்னம்.
ஷங்கருடன் 28 வருட இடைவெளிக்குப் பிறகும், மணிரத்னத்துடன் 37 வருட இடைவெளிக்குப் பிறகும் மீண்டும் கூட்டணி அமைத்தார். நீண்டகால இடைவெளி, அவர்கள் முதலில் இணைந்த 'இந்தியன்' மற்றும் 'நாயகன்' படங்கள் தமிழ் சினிமாவில் முக்கியமான படங்கள் என்று இன்றளவும் பேசப்படுகின்றன. இத்தனை வருட இடைவெளி தலைமுறை இடைவெளியாகவும் அமைந்து இன்றைய இளம் ரசிகர்களை கவர முடியாமல் போனதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
அதேசமயம், புதிய கூட்டணியாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்த 'விக்ரம்' படம் கமல்ஹாசனின் சினிமா உலக வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையைப் பெற்றுத் தந்தது. இன்றைய தலைமுறை இயக்குனர்களுடனான கூட்டணியை கமல்ஹாசன் முயற்சிக்க வேண்டும் என்ற குரல் கோலிவுட்டில் கேட்க ஆரம்பித்துள்ளது. அவருடைய அடுத்த படமான 237வது படத்தை ஸ்டன்ட் மாஸ்டர்களான அன்பறிவு இயக்க உள்ளார்கள். அந்தப் படத்தில் அதிக கவனம் செலுத்தி 'விக்ரம்' படத்தை விடவும் பெரும் வெற்றியைக் கொடுக்கும் விதத்தில் அவர் உழைக்க வேண்டும் என அவரது ரசிகர்களும், திரையுலக நலம் விரும்பிகளும் எதிர்பார்க்கிறார்கள்.