‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
தெலுங்குத் திரையுலகத்தில் தனது அதிரடிக்காக மிகவும் பிரபலமானவர் நடிகர் பாலகிருஷ்ணா. அவரது நடிப்பில் பொயப்பட்டி சீனு இயக்கத்தில் உருவாகி வரும் 'அகாண்டா 2' படத்தின் டீசர் நேற்று முன்தினம் யு டியூப் தளத்தில் உருவானது. யாரும் எதிர்பார்க்காத விதத்தில் சில இளம் ஹீரோ படங்களின் டீசர், சீனியர் ஹீரோவான சிரஞ்சீவியின் 'விஷ்வம்பரா' பட டீசர் ஆகியவற்றின் 24 மணி நேர சாதனையை இந்த டீசர் முறியடித்துள்ளது.
24 மணி நேரத்தில் 22.3 மில்லியன் பார்வைகளைப் பெற்று அதிகப் பார்வைகளைப் பெற்ற தெலுங்கு பட டீசர்களில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. பிரபாஸ் நடித்த 'ராதே ஷ்யாம்' டீசர் 42.6 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்திலும், ராம் சரண் நடித்த 'கேம் சேஞ்ஜர்' டீசர் 32.4 மில்லியன்களுடன் 2வது இடத்திலும் மகேஷ் பாபு நடித்த 'சர்க்காரு வாரி பாட்டா' டீசர் 23 மில்லியன்களுடன் 3வது இடத்திலும், 'புஷ்பா ராஜ்' அறிமுக டீசர் 22.5 மில்லியன்களுடன் 4வது இடத்திலும் உள்ளன.
'அகாண்டா 2' டீசருக்குக் கிடைத்துள்ள இப்படியான வரவேற்பு படத்தின் வியாபாரத்திற்கு பெரிய உதவி செய்யும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பான் இந்தியா படமாக வழக்கம் போல மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டால் படம் வசூலை அள்ளும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.