Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஐந்தே மாதங்களில் சதம் அடித்த 2025, சாதனையா? சோதனையா?

02 ஜூன், 2025 - 01:23 IST
எழுத்தின் அளவு:
Is-2025,-which-scored-a-century-in-just-five-months,-a-record-A-test

2025ம் ஆண்டு இப்போதுதான் பிறந்தது போல உள்ளது. அதற்குள் ஐந்து மாதங்கள் ஓடிவிட்டது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இந்த 2025ம் ஆண்டில் அனைத்து முக்கிய நடிகர்களின் படங்களும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தது. ஓரிரு நடிகர்களின் படங்களைத் தவிர மற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டில் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

ஐந்தே மாதங்களில் 100

முடிந்த மே மாத வெள்ளிக்கிழமையுடன் இந்த வருடத்தில் இதுவரை வெளியான படங்களின் எண்ணிக்கை 100ஐக் கடந்துவிட்டது. எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் ஒவ்வொரு வாரமும் ஏதாவது சில படங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்கள், சிறிய நடிகர்களின் படங்கள், பிரம்மாண்டப் படங்கள், சிறிய பட்ஜெட் படங்கள் என 100ன் பட்டியலில் அடங்கும்.

100ல் 7 மட்டுமே வெற்றி

இந்த 100 படங்களில் வெளிவந்த முக்கிய நடிகர்களின் படங்கள் என்று பார்த்தால், அஜித் நடிப்பில், 'குட் பேட் அக்லி', விஷால் நடிப்பில் 'மத கஜ ராஜா', சசிகுமார் நடிப்பில் 'டூரிஸ்ட் பேமிலி', பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்', மணிகண்டன் நடிப்பில் 'குடும்பஸ்தன்', சூரி நடிப்பில் 'மாமன்' ஆகிய ஆறு படங்கள் மட்டுமே குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். 'வீர தீர சூரன்' படம் விக்ரமிற்கு, நெருக்கமான வெற்றியைத் தந்துள்ளது.

அஜித் நடித்து வெளிவந்த மற்றொரு படமான 'விடாமுயற்சி', சூர்யா நடித்த 'ரெட்ரோ', ரவி மோகன் நடித்த 'காதலிக்க நேரமில்லை', விஜய் சேதுபதி நடித்த 'ஏஸ்', 'சந்தானம் நடித்த 'டிடி நெக்ஸ்ட் லெவல்', ஆகிய படங்கள் ஏமாற்றத்தையே தந்தன.

இயக்குனர்களுக்கு எப்படி?

இயக்குனர்களைப் பொறுத்தவரையில் சுந்தர் சி இயக்கத்தில் 'மத கஜ ராஜா, கேங்கர்ஸ்' ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்துள்ளன. அதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த 'மத கஜ ராஜா' படம் இந்த ஆண்டின் முதல் வெற்றிப் படமாக அமைந்தது. 'கேங்கர்ஸ்' படத்தில் சுந்தர் சி, வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கூட்டணி சேர்ந்தார்கள். ஆனால், படம் சிரிக்க வைக்கத் தவறியது.



பாலா இயக்கத்தில் வந்த 'வணங்கான்' ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நடிகர் தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இணைந்த 'ரெட்ரோ' படத்தின் 'கனிமா' பாடல் வைரல் ஆகி பெரும் வரவேற்பைப் பெற்றது. படமும் அப்படியே இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

குடும்பங்கள் கொண்டாடிய வெற்றி

எதிர்பார்க்காத வெற்றியைத் தந்த படங்கள் என இந்த ஆண்டில் இரண்டு படங்களைக் குறிப்பிடலாம். ஒன்று 'குடும்பஸ்தன்', மற்றொன்று 'டூரிஸ்ட் பேமிலி'. இரண்டு படங்களையும் இயக்கியவர்கள் அறிமுக இயக்குனர்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.



'குடும்பஸ்தன்' படத்தை ராஜேஷ்வர் காளிசாமி இயக்க மணிகண்டன், சான்வீ மேக்னா, குரு சோமசுந்தரம் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். 'டூரிஸ்ட் பேமிலி' படத்தை அபிஷன் ஜீவிந்த் இயக்க, சசிகுமார், சிம்ரன் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இந்தக் காலத்து இளம் ரசிகர்கள் குடும்பக் கதைகளை ரசிப்பதில்லை என்ற ஒரு பேச்சு இருந்தது. ஆனால், இந்த இரண்டு படங்களும் குடும்பக் கதைகள்தான், இரண்டையும் இயக்கியது இளம் இயக்குனர்கள் தான்.

அதிக லாபம் தந்த டிராகன்



அசத்தலான வெற்றியைத் தந்த ஒரு படம் என 'டிராகன்' படத்தைச் சொல்லலாம். சுமார் 30 கோடி பட்ஜெட்டில் தயாரான படம் என்று ஒரு தகவல். ஆனால், 150 கோடிக்கும் சற்றே கூடுதலாக வசூலித்து, இந்த ஆண்டில் அதிக லாபத்தைக் கொடுத்த படம் என்ற பெருமையைப் பெற்றது. படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து, நடித்த பிரதீப் ரங்கநாதன் ஆகியோருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் அதிகமாகவே தேடி வந்தது. அதற்கக் காரணம் படத்தின் பரவலான வெற்றி. அனைத்து சென்டர்களிலுமே வசூலை அள்ளியது.

காமெடி நடிகர்களும் கதாநாயகனாக வளர்ந்து நிற்கும் காலம் இது. ஒரே நாளில் சந்தானம், யோகி பாபு, சூரி ஆகியோர் கதாநாயகர்களாக நடித்த படங்கள் வெளிவந்தன. அவற்றில் 'சூரி' நடித்த 'மாமன்' படம் வரவேற்பையும், வசூலையும் பெற்றது. தனி கதாநாயகனாக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார் சூரி.

ஒரு நாள் கூட தாக்குபிடிக்காத படங்கள்



இதுவரையில் வெளியான 100 படங்கள் சுமார் 20 படங்கள் மட்டுமே ரசிகர்களுக்குத் தெரிந்த நடிகர்கள், நடிகைகள் நடித்த படங்களாக இருந்தது. மற்ற 80 படங்களும் அதிகம் தெரியாத முகங்கள் நடித்த சிறிய பட்ஜெட் படங்கள்தான். இந்தப் படங்களில் பெரும்பாலான படங்கள் ஓரிரு நாட்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாத படங்களாகவே இருந்தன.

'டாப்' ஹீரோனாலும் கதை தான் ஜெயிக்கும்

நல்ல கதையம்சம், புதிய காட்சிகள் கொண்ட படங்களைப் பார்க்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை 'குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி' போன்ற படங்கள் நிரூபித்துள்ளன. கதை சரியில்லாத பெரிய நடிகர்கள் படங்களாக இருந்தாலும் அவற்றை ரசிகர்கள் புறக்கணித்ததும் நடந்துள்ளது. அஜித்திற்கு 'விடாமுயற்சி', சூர்யாவுக்கு 'ரெட்ரோ' என உதாரணங்களைச் சொல்லலாம்.

இதை சற்றே யோசித்து நல்ல படங்களைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள் தமிழ் திரையுலகினருக்கு ஒரு வேண்டுகோளை வைப்போம்.

2025ல் வெளியான 100 படங்களின் பட்டியல்…

ஜனவரி

ஜனவரி 3 : பயாஸ்கோப், கடைசி நேரத்தில், கலன், லாரா, மௌனமே காதலாய், சீசா, எக்ஸ்ட்ரீம்
ஜனவரி 10 : மெட்ராஸ்காரன், வணங்கான்
ஜனவரி 12 : மத கஜ ராஜா
ஜனவரி 14 : காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, தருணம்
ஜனவரி 17 : சிதறிய பக்கங்கள்
ஜனவரி 24 : பாட்டல் ராதா, குடும்பஸ்தன், குழந்தைகள் முன்னேற்றக் கழகம், Mr ஹவுஸ் கீப்பிங், நான் வேற மாதிரி, பூர்வீகம், வல்லான்
ஜனவரி 31 : காண்டீபன், ராஜபீமா, ரிங் ரிங், தறுதல, வரம்பு

பிப்ரவரி

பிப்ரவரி 6 : விடாமுயற்சி
பிப்ரவரி 14 : 2 கே லவ் ஸ்டோரி, 9 எஎம் டூ 9 பிஎம் வேலண்டைன்ஸ் டே, அது வாங்குனா இது இலவசம், பேபி & பேபி, தினசரி, பயர், காதல் என்பது பொதுவுடமை, கண்நீரா, ஒத்த ஓட்டு முத்தையா
பிப்ரவரி 21 : ட்ராகன், ஈடாட்டம், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், பல்லவபுரம் மனை எண் 666, பிறந்தநாள் வாழ்த்துகள்
பிப்ரவரி 28 : அகத்தியா, கடைசி தோட்டா, கூரன், சப்தம்

மார்ச்

மார்ச் 7 : படவா, ஜென்டில்வுமன், கிங்ஸ்டன், லெக்பீஸ், மர்மர், மனிதம், நிறம் மாறும் உலகில், எமகாதகி
மார்ச் 14 : டெக்ஸ்டர், கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், குற்றம் குறை, மாடன் கோடை விழா, பெருசு, ராபர், ஸ்வீட் ஹார்ட், வருணன், வீரத்தின் மகன்
மார்ச் 21 : அஸ்திரம் த சீக்ரட், எனை சுடும் பனி, ஓஜா, பேய் கொட்டு, ட்ராமா
மார்ச் 27 : வீர தீர சூரன் 2
மார்ச் 28 : அறம் செய், த டோர், மிஸ்டர் பர்பெக்ட்

ஏப்ரல்

ஏப்ரல் 4 : EMI, கா மு கா பி, S/o காளிங்கராயன், தரைப்படை
ஏப்ரல் 10 : குட் பேட் அக்லி
ஏப்ரல் 18 : நாங்கள், டென் ஹவர்ஸ்
ஏப்ரல் 24 : கேங்கர்ஸ்
ஏப்ரல் 25 : வாங்கண்ணா வணக்கங்கண்ணா, சுமோ, வல்லமை

மே


மே 1 : ரெட்ரோ, டூரிஸ்ட் பேமிலி
மே 9 : அம்பி, என் காதலே, கலியுகம், கீனோ, நிழற்குடை, சவுடு, யாமன், எமன் கட்டளை, வாத்தியார் குப்பம்
மே 16 : டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல், லெவன், ஜோரா கைய தட்டுங்க, மாமன்
மே 23 : ஆகக் கடவன, ஏஸ், அகமொழி விழிகள், மையல், ஸ்கூல், திருப்பூர் குருவி, வேம்பு
மே 30 : ஆண்டவன், ஜின் த பெட், ராஜபுத்திரன், த வெர்டிக்ட்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சின்னத்திரை டூ வெள்ளித்திரை... தமிழ் பேசும் நடிகைகளுக்கும் வாய்ப்பு : மாறுது சினிமா டிரெண்ட்!சின்னத்திரை டூ வெள்ளித்திரை... தமிழ் ... விடியற்காலையில் நடந்த அகில் அக்கினேனி திருமணம் விடியற்காலையில் நடந்த அகில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in