ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
ஜோதிகிருஷ்ணா இயக்கத்தில், பவன் கல்யாண், நிதி அகர்வால், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஹரிஹர வீர மல்லு'. பான் இந்தியா படமாக ஜுன் 12ம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பட வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளார்கள். படத்தின் வேலைகள் இன்னும் முடியாததே அதற்குக் காரணம்.
படத்தின் டிரைலர் வெளியீட்டுடன் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் எதிர்பாராத விதமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. படம் தரமாக வருவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார்கள்.
கடந்த ஐந்து வருடங்களாக இந்தப் படம் தயாரிப்பில் உள்ளது. முதலில் படத்தை இயக்கிய கிரிஷ் விலகிய பின்பு, தயாரிப்பாளரான ஏஎம் ரத்னம் மகன் ஜோதிகிருஷ்ணா படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றார்.
இந்தப் பட வெளியீட்டிற்கான தாமதம் காரணமாக சில முக்கியப் படங்களின் வெளியீட்டுத் தேதிகளிலும் மாற்றம் வரலாம் என்கிறார்கள்.