இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ |
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம் 'மெட்ராஸ் மேட்னி'. கார்த்திகேயன் மணி இயக்கி உள்ளார். சத்யராஜ், காளி வெங்கட் , ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் ஜி.கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார்.
'கருடன்' படத்தில் நடித்த ரோஷ்னி ஹரிபிரியன் நாயகியாக நடித்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ரோஷ்னி பேசும்போது "இந்த படத்தில் எந்த ஒரு இடத்திலும் மேக்கப் போடாமல் நடித்திருக்கிறேன். அப்படி இருந்தும் என்னை அழகாக காட்டி இருக்கிறார் ஒளிபதிவாளர் ஆனந்த், அவர் மூலமாகத்தான் இந்த பட வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அழகா நான் இருக்கிறேன் என்பதை இவரோடு பிரேம்ல தான் பார்த்து தெரிந்து கொண்டேன்.
இயக்குனர் கதை சொன்னபோதே என் வீட்டு ஞாபகங்கள் வந்தது, படம் பார்க்கும் போது உங்கள் எல்லோருக்கும் உங்கள் வீட்டுச் சம்பவங்கள் ஞாபகம் வரும். எனக்கு வயதானால் கூட இப்படி ஒரு படம் நான் நடித்திருக்கிறேன் எனப் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன், அந்தளவு மனதுக்கு நெருக்கமான படம் இது.
காளி வெங்கட் நடித்தது மிகச்சிறந்த அனுபவம், இந்தப்படத்தில் அவர் தான் எனக்கு அப்பா. இந்த படத்தில் ஒரு அப்பாவுக்கும் ஒரு பொண்ணுக்கமான ரிலேஷன்ஷிப் தான் படம். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஷெல்லி மேடம் மிக அழகா நடித்திருக்கிறார்கள். படத்தில் எல்லோரும் மிகச்சிறப்பா வேலை பார்த்திருக்கிறார்கள், இந்தப்படம் பார்க்கும் போது உங்களுடைய பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகம் வரும். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்" என்றார்.
இந்த படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வரும் ஜூன் 6 ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறது.