கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' |
அட்டக்கத்தி, பீட்சா, தெகிடி உட்பட பல படங்களின் எடிட்டிரான லியோ ஜான்பால் இயக்கும் மார்கன் படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார் விஜய் ஆண்டனி. அடுத்த மாதம் படம் ரிலீஸ். அவரே தயாரித்து, இசையமைத்தும் உள்ளார். அவருடைய சகோதரி மகன் அஜய் இதில் வில்லன்.
சென்னையில் நடந்த பட விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, இது நான் நடிக்கும் 26வது படம், பல படங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். பல படங்களை தயாரித்து இருக்கிறேன். அடுத்தும் சில படங்களை தயாரிக்கப்போகிறேன். ஆனாலும், கடன் வாங்கிதான் படம் தயாரிக்கிறேன். இப்போதும் வட்டிக்கட்டிக்கொண்டு இருக்கிறேன்'' என்றார்.
மேலும் அவர் பேசுகையில் ''நான் எத்தனை படங்கள் நடித்தாலும் பிச்சைக்காரனை மறக்க முடியாது. என்னை டிஷ்யூம் படத்தில் அவர்தான் இசையமைப்பாளர் ஆக்கினார். அவரை மறக்கமாட்டேன். மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்கப் போகிறேன். அந்த படத்திலும் என் மருமகன் அஜய்க்கு முக்கியமான வேடம்' என்றார்.
மார்கன் படத்தில் ஆந்தை, ஆமை முக்கியமான பாத்திரமாக வருவதால், சென்னையில் நடந்த விழா மேடையிலும் ஆந்தை, ஆசை உருவகங்களை விஜய் ஆண்டனி வைத்து இருந்தார். ஆமை, அமீனா குறித்து பல மூட நம்பிக்கைகள் இருக்கிறது. அதை தவிர்க்கவே மேடையில் இதை செய்தேன்' என்றார் விஜய் ஆண்டனி.