அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
நடிகர் ரவிமோகன், ஆர்த்தி விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் ரவிமோகனுக்கும் பாடகி கெனிஷாக்கும் இடையிலான உறவு வெளிச்சத்துக்கு வந்தது. இதன் பிறகு இது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. ரவிமோகன், ஆர்த்தி, கெனிஷா ஆகிய மூவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டனர்.
சமூக வலைதளங்களை பொறுத்தவரை பெரும்பாலோனார் ஆர்த்திக்கு ஆதரவாக உள்ளனர். நல்ல குடும்பத்திற்குள் புகுந்து கெடுப்பதாக கெனிஷா மீது விமர்சனம் செய்து வருகிறார்கள். அதோடு சில நெட்டிசன்கள் எல்லை மீறி கெனிஷாவுக்கு பாலியல் மிரட்டல், கொலை மிரட்டல் கூட விடுத்துள்ளனர். இந்த நிலையில் தனக்கு பலாத்கார மிரட்டல், கொலை மிரட்டல் விடுத்து போடப்பட்ட கமெண்ட்டுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு 'கடவுளே இதை எல்லாம் உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன்' என்றார். மேலும் 'நான் தவறு செய்திருந்தால் நீ என்னை எரித்துவிடு இறைவனே' என்று பதிவிட்டிருந்தார்.
இருப்பினும் கெனிஷாவிற்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் கெனிஷா தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'தன்னை பற்றி வெளியான செய்திகள், வீடியோக்கள், மோசமான கமெண்ட்டுகள், மோசமான புகைப்படங்கள் ஆகியவற்றை 48 மணிநேரத்திற்குள் நீக்க வேண்டும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.