துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆந்திர துணை முதல்வராகவும் இருக்கும் பவன் கல்யாண். அவர் நாயகனாக நடித்துள்ள 'ஹரிஹர வீர மல்லு' என்ற திரைப்படம் ஜுன் 12ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் அவரது அலுவலகம் சார்பில் பத்திரிகைக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் தெலுங்குத் திரையுலகத்தினர் மீதுள்ள அவருடைய கோபம் வெளிப்பட்டுள்ளது. முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் தெலுங்குத் திரையுலகினருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் பற்றியும், தற்போதைய சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியில் தெலுங்குத் திரையுலகத்திற்குக் கொடுக்கப்பட்டு வரும் முக்கியத்துவமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்திரபாபு தலைமையிலான அரசு ஆந்திராவில் பதவியேற்று ஒரு வருடம் ஆகியும், தெலுங்குத் திரையுலகத்தின் பிரநிதிகள் இன்னும் அவரை சந்திக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளார்கள். இனி, தெலுங்கு தயாரிப்பாளர்கள் ஆந்திர அரசாங்கத்தை தனித்தனியாக நேரடியாகத் தொடர்பு கொண்டு டிக்கெட் கட்டண உயர்வு உள்ளிட்ட விவரங்களைக் கேட்க அனுமதியில்லை என்றும் சம்பந்தப்பட்ட சங்கம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியேட்டர் வருவாய், வரி செலுத்துதல், அடிப்படை வசதி இல்லாதது, மல்டிபிளக்ஸ தியேட்டர் செயல்பாடு, டிக்கெட் கட்டணம் உள்ளிட்டவை குறித்து தெலுங்கு திரையுலகத்தினர் அமைதியாக இருப்பதாகவும், இந்த விவகாரம் குறித்து விரைவில் அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜுன் 1ம் தேதி முதல் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தியேட்டர்களை மூடி ஸ்டிரைக் நடத்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதை உடனடியாக காலவரையின்றி ஒத்தி வைப்பதாக தெலுங்கு திரையுலகத்தினர் அறிவித்துள்ளனர்.
ஜுன் 12ம் தேதி தன்னுடைய 'ஹரிஹர வீர மல்லு' படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட சூழ்நிலையிலும் தெலுங்குத் திரையுலகத்தினர் ஸ்டிரைக் அறிவித்தது பவன் கல்யாணை கோபப்பட வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதனால்தான் உடனடியாக ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆந்திர அரசு திரையுலகினருக்கு ஆதரவாக உள்ள நிலையில் இப்படியான ஸ்டிரைக்கை அறிவித்ததும், அவர்கள் இதுவரை ஆந்திர முதல்வரை சந்திக்காததும்தான் பவன் கல்யாண் அலுவலகத்திலிருந்து கடுமையான பத்திரிகைக் குறிப்பு வரக் காரணமாக அமைந்துவிட்டது என்பது தெலுங்குத் திரையுலகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, பவன் கல்யாணின் படத்திற்கு தெலுங்கானா அரசு டிக்கெட் கட்டண உயர்வைத் தருமா என்ற கேள்வியையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள். தெலுங்கு திரையுலகை வைத்து ஆந்திர அரசியலிலும், தெலுங்கானா அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.