கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக கடந்த 45 வருடங்களுக்கு மேலாக கோலோச்சி வரும் மோகன்லால், சமீபத்தில் தனது 65வது பிறந்த நாளை கொண்டாடினார். தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் மோகன்லால், கடந்த 30 வருடங்களுக்கு முன்பே தனது திரையுலக வாழ்க்கை முடிவுக்கு வந்து விடுமோ என்று அச்சப்படும்படியான ஒரு சூழல் ஏற்பட்டதாகவும் அதிலிருந்து தான் எப்படி மீண்டு வந்தேன் என்பது குறித்தும் பிரபலம் மலையாள நாளிதழ் ஒன்றில் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “35 வருடங்களுக்கு முன்பு நான் அப்போதுதான் சினிமாவில் அடியெடுத்து வைத்து ஓரளவு பிஸியாக நடிக்க தொடங்கிய அந்த சமயத்தில் கடுமையான முதுகு வலியால் பாதிக்கப்பட்டிருந்தேன். அப்போது சென்னையில் உள்ள ஒரு மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்றபோது என்னை பரிசோதித்து விட்டு, முதுகில் ஒரு பிளேட் வைத்து போல்ட் போட்டு சரி செய்தால்தான் அடுத்து ஓரளவுக்கு நடமாட முடியும் என்று என்னிடம் கூறினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதற்கு நான் மறுத்தேன். இப்போது நீங்கள் மறுத்து விட்டால் இன்னும் ஆறு மாதம் கழித்து இதைவிட மோசமான நிலையில் தான் என்னை வந்து சந்திப்பீர்கள் என்று அவர் சொன்னார். அப்போது கொஞ்சம் மன உளைச்சல் ஏற்பட்டது.
அந்த சமயத்தில் தான் தாசேட்டனை (ஜேஜே யேசுதாஸ்) சந்தித்தபோது அவர் கோவையில் உள்ள ஆரிய வைத்திய பார்மசி குறித்து என்னிடம் கூறி அங்கே செல்லுமாறு அறிவுறுத்தினார். அங்கே ராம வாரியர் மற்றும் கிருஷ்ணகுமார் என்ற இரண்டு ஆயுர்வேத மருத்துவர்கள் என்னை பரிசோதித்து விட்டு 40 நாட்கள் இரண்டு கட்டமாக எனக்கு சிகிச்சை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட ஒரு தெரபி போலத்தான். அந்த சமயத்தில் நான் எதையும் படிக்க கூடாது என்றும் அதிகம் நடக்கக்கூடாது, அதிக நேரம் உட்கார்ந்து இருக்கக்கூடாது என்றும் கூறிய அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு கண்களை மூடி பேசாமல் படுத்து விடும்படி என்னை அறிவுறுத்தினர். அவர்கள் இருவரும் என்னை தினசரி வந்து பார்த்து சென்ற பிறகு கிட்டத்தட்ட தனிமை தான்.
ஒரு தான் கிருஷ்ணகுமார் ஒரு ஆடியோ கேசட்டை கொண்டு வந்து போட்டுவிட்டு இது ஓஷோ ரஜனீஷின் பேச்சு, இதை கேளுங்கள் என்று கூறினார். அவரது பேச்சை கேட்ட அன்றில் இருந்து எனக்குள் ஏதோ ஒரு புதிய விடியல் தோன்றியது போல உணர்ந்தேன். பின்னர் அங்கிருந்த நாட்களில் தொடர்ந்து அவரது பேச்சுக்களை ஆடியோ கேசட் மூலமாக கேட்டேன். என்னுடைய வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியதில் ஓஷோவின் பேச்சுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது” என்று எழுதியுள்ளார் மோகன்லால்.