கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை | தமிழ் சினிமாவில் குறைந்து வரும் காமெடி…, ரைட்டர்கள் இல்லையா? | 3வது வாரத்திலும் முன்னேறும் 'டூரிஸ்ட் பேமிலி', பின்வாங்கும் 'ரெட்ரோ' | தக் லைப் : ஓடிடி, சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா ? | ஸ்லிம் ரகசியத்தை கேட்டவர்களுக்கு குஷ்பு கொடுத்த பதில்! | மீண்டும் நடிப்புக்கு திரும்பிய எமி ஜாக்சன்! | ரவி மோகன் - கெனிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகி சுசித்ரா! | பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத் தலைப்புக்கு சிக்கல்! | நடிகை சிம்ரனுக்கு துணையாக டிவி நடிகை ஆனந்தி |
குணசித்ரம் மற்றும் காமெடி நடிகரான காளி வெங்கட், தோனிமா, குரங்கு பெடல் உள்ளிட்ட சில படங்களில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் மீண்டும் கதைநாயகனாக நடித்துள்ள படம் 'மெட்ராஸ் மேட்னி'.
இந்த படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கார்த்திகேயன் மணி இயக்கி உள்ளார். சத்யராஜ், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆனந்த் ஜி.கே.ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே.சி.பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. வருகிற ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.