சென்னை பக்கம் வர மறுக்கும் சமந்தா? | ரமணா 2 உருவாக வாய்ப்பு இருக்குதா? | என்னது, ரஜினி சம்பளம் 300 கோடியா? | கோவிந்தா பாடல் நீக்கம் : சந்தானம், ஆர்யா சரண்டர் ஆனது ஏன்? | தாதாசாகேப் பால்கே பயோபிக் : இரண்டு படங்கள் போட்டி? | மீண்டும் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் | என் அழகான வாழ்க்கை துணை கெனிஷா : ரவி மோகன் அறிவிப்பு | ''பிள்ளைகளுக்காகவே வாழ்கிறேன்; என்னை தங்க முட்டையாகவே பார்த்தனர்'': ரவி மோகன் 'ஓபன் டாக்' | பாலகிருஷ்ணாவிற்கு கதை கூறிய ஆதிக் ரவிச்சந்திரன் | கிஸ் படம் ஜூலை மாதம் வெளியாகிறது |
மைக் மோகன் படம் என்றாலே, காதல், பாடல் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அவர் நடித்த படம் ஒன்று அதீத படுக்கை அறை காட்சிகள், வன்முறை காட்சிகள் இருப்பதாக தணிக்கை குழுவால் தடை செய்யப்பட்டிருக்கிறது. அந்த படம் 'நிரபராதி'.
இந்தி மொழி படங்களை வாங்கி ரீமேக் செய்து வந்த கே.பாலாஜி, இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'பி அப்ரூ' என்ற படத்தை தமிழில் 'நிரபராதி' என்ற பெயரில் தயாரித்தார். இந்த படத்தை கே.மாதவன் இயக்கினார். மோகன், மாதவி, நிழல்கள் ரவி, சில்க் ஸ்மிதா, சத்யகலா, ராணி பத்மினி, அனுராதா உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்தின் மூலம் மலையாள நடிகர் சுரேஷ் கோபி தமிழில் அறிமுகமானார்.
நிழல்கள் ரவிதான் படத்தின் வில்லன். அவரும், அவரது நண்பர்களும் பல அப்பாவி பெண்களை காதலிப்பது போல நடித்து, திருமணமும் செய்து அவர்களை விபச்சார கும்பலிடம் விற்பார்கள். இந்த கூட்டத்தை இன்ஸ்பெக்டர் மோகனும், பத்திரிகையாளர் மாதவியும் சேர்ந்து எப்படி கண்டுபிடித்து தண்டிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
இந்த கதைக்கு ஏற்றபடி படத்தில் ஏராளமான படுக்கை அறை காட்சிகள், ரத்தம் தெறிக்கும் கொலை காட்சிகள் இருந்தது. இதனால் படத்தை பார்த்தை தணிக்கை குழுவினர் படத்தை வெளியிட தடை விதித்தனர். பின்னர் காட்சிகள் குறைக்கப்பட்டு ஒரு மாதம் தாமதமாக வெளியிடப்பட்டது. என்றாலும் படம் வரவேற்பை பெறவில்லை.