அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்ட கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் | மகன் படத்தில் பாடுவாரா விஜய்? | திரையுலகில் 50வது ஆண்டு: பாரதரத்னா விருது பெறுவாரா இளையராஜா? | இந்தியிலும் கலக்கும் ரெஜினா | கையில் கட்டு ஏன்? சண்டையா? வரலட்சுமி விளக்கம் | சூர்யா 46வது படத்தில் விஜய் தேவரகொண்டா? | நாங்கள் ஒரு நல்ல படம் தயாரித்துள்ளோம் : சூரஜ் பஞ்சோலி | '3 பிஎச்கே' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! |
கொரானோ காலத்தில் இந்தியாவில் ஓடிடி தளங்கள் மிகவும் பிரபலமடைந்தன. தியேட்டர்கள் மூடப்பட்டதால் மக்கள் பொழுதுபோக்கிற்காக ஓடிடி தளங்கள் பக்கம் சென்றனர். அதைப் பயன்படுத்திய நிறுவனங்கள் நேரடியாகவே திரைப்படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட்டன. அந்தக் காலகட்டத்தில் ஓடிடி தளங்களை 'சப்ஸ்க்ரைப்' செய்த மக்கள் அதை அப்படியே இப்போது வரை தொடர்ந்து வருகிறார்கள்.
தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்க்காதவர்கள், நான்கே வாரங்களில் ஓடிடி தளத்தில் வரும் புதிய படங்களைக் குறைந்த செலவில் பார்ப்பதை விரும்பினர். அதனால், இந்தியாவில் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜீ 5, சோனி லிவ் உள்ளிட்ட தளங்கள் பல புதிய படங்களை வெளியிடவும், புதிய வெப் சீரிஸ்களைத் தயாரித்து தங்கள் சந்தாதாரர்களை தக்க வைத்துக் கொள்ளவும் செய்தன.
இருந்தாலும் ஓடிடி தளங்களில் இடம் பெறும் விளம்பரங்கள் பார்வையாளர்களுக்கு எரிச்சலைத் தந்தன. ஒரு படத்தை சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென வரும் விளம்பரங்கள் அவர்களுடைய சகிப்புத்தன்மையை சோதிக்க ஆரம்பித்தன.
தனியார் சாட்டிலைட் டிவிக்களில் இடம் பெறும் விளம்பரங்கள் போல ஓடிடி தளங்களில் விளம்பரம் வருவது பார்வையாளர்களுக்குப் பிடிக்கவில்லை. விளம்பரங்கள் இல்லாமல் பார்க்க கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தார்கள்.
இதுநாள் வரையில் அமேசான் பிரைம் தளத்தில் மட்டும் விளம்பரங்கள் இடம் பெற்றதில்லை. அவர்களும் மற்றவர்கள் வழியைப் பின்பற்றி அடுத்த மாதம் ஜுன் 17ம் தேதி முதல் விளம்பரங்களை ஒளிபரப்பப் போகிறார்களாம். விளம்பரங்கள் இல்லாமல் பார்க்க ஒரு சந்தாதாரர் மாதம் ரூ.129 அல்லது வருடத்திற்கு ரூ.699 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமாம்.
இந்தக் கட்டணத்தை செலுத்தி பார்வையாளர்கள் தொடர்வார்களா அல்லது விலகுவார்களா அல்லது விளம்பரத்துடனேயே பார்த்துக் கொள்கிறோம் என முடிவெடுப்பார்களா என்பது போகப் போகத் தெரியும்.