ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு | தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் |

ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான படம் 'கூலி'. இப்படத்தின் பிரிமியர் காட்சிகள் அமெரிக்காவில் பல தியேட்டர்களில் நடந்துள்ளன. இதுவரை இல்லாத அளவிற்கு அப்படங்களுக்கான முன்பதிவு நடைபெற்றது.
பிரிமியர் காட்சிகள் மற்ற காட்சிகளுக்கான முன்பதிவுகள் ஆகியவை சேர்த்து தற்போது அமெரிக்க வசூல 3.9 மில்லியன் யுஎஸ் டாலரைக் கடந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 34 கோடியே 18 லட்சம்.
அமெரிக்காவில் பிரிமியர் காட்சிகளின் மூலம் அதிக வசூலைப் பெற்ற படங்களில் 'கூலி' நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அக்காட்சிகளின் மூலம் மட்டும் 3.04 மில்லியன் யுஎஸ் டாலரை வசூலித்துள்ளது. இதற்கு முன்பாக 'கல்கி 2898 ஏடி' படம் 3.9 மில்லியன் யுஎஸ் டாலர், 'ஆர்ஆர்ஆர்' 3.5 மில்லியன், 'புஷ்பா 2' 3.34 மில்லியன் யுஎஸ் டாலரைப் பெற்றுள்ளன. 'தேவரா' படம் 2.85 மில்லியனை வசூலித்துள்ளது.
முதல் 5 இடங்களில் 4 தெலுங்குப் படங்களும் ஒரே ஒரு தமிழ்ப் படமும் பட்டியலில் உள்ளன.