இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
'துப்பாக்கி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆஷிப். சமீபத்தில் வெளியான சூர்யாவின் 'ரெட்ரோ' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விக்ரமின் “துருவ நட்சத்திரம்” படத்தில் வில்லனாக நடித்துள்ளார். 'ரெட்ரோ' படத்தில் தான் நடித்துள்ள பெரும்பாலான காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதாக ஆஷிப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது : துப்பாக்கி என் முதல் படம் என்பதால், எனக்கு நிறைய தயக்கம் இருந்தது. ஆனால் விஜய் ஆதரவாக, பொறுமையாக சொல்லித் தந்து எங்களைப் பார்த்துக் கொண்டார். அவரது எளிமை எனக்குப் பிடிக்கும். அவருடன் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.
விக்ரம் ஒரு பிறவி நடிகர், எந்த கதாப்பாத்திரம் தந்தாலும் அதுவாகவே மாறிவிடுவார். துருவ நட்சத்திரம் படத்தில் என் கதாப்பாத்திரத்தை கண்டிப்பாக எல்லோரும் பாராட்டுவார்கள், மிக முக்கியமான கதாப்பாத்திரம் செய்துள்ளேன்.
சூர்யாவுடன் 18 நாட்கள் ரெட்ரோ படத்தில் பணிபுரிந்தேன். சில காரணங்களால் படத்தில் சில காட்சிகள் வரவில்லை. இது வருத்தமாக இருந்தாலும், சூர்யாவுடன் நடித்தது மறக்க முடியாதது.
தமிழ் என் சொந்த நிலம் போல் ஆகிவிட்டது. இங்கு இருக்கும்போது தான் நான் மிக சுதந்திரமாக உணர்கிறேன். இப்போது நிறைய தமிழ்ப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளது. தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் எனக்கென ஓர் இடம் பிடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை". என்றார்.