பாதுகாப்பு வீரர்களின் தியாகம்: சமந்தா நெகிழ்ச்சி | 23வது ஆண்டில் தனுஷ்! - குபேரா படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியானது! | ‛ஜனநாயகன்' படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய்! லீக் அவுட் ஆன புகைப்படம்!! | பாடகி கெனிஷாவுடன் என்ட்ரி கொடுத்த ரவி மோகன்- ஆர்த்திக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா - குஷ்பூ! | கமலின் 237வது படத்தை இயக்கும் அன்பறிவ் பிறந்த நாள் - வீடியோ வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்! | ரஜினி அடுத்த பட ரேசில் வினோத், அருண்குமார்! | சிவாஜி குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகர்! | சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மோகன்லால்? | பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி |
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை கடந்த 7ம் தேதி அதிகாலை நம் படைகள் தரைமட்டமாக்கின. இதில் ஆத்திரமடைந்த பாக்., ராணுவம், அன்று இரவே ஜம்மு - காஷ்மீர் எல்லையோர கிராமங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் வாயிலாக தாக்கியது. இவை அனைத்தையும் பாதுகாப்பு வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர்.
இந்த நிலையில் தேசத்தை பாதுகாக்கும் பாதுகாப்பு வீரர்கள் பற்றி நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், ‛‛வீட்டை விட்டு, குடும்பத்தை விட்டு வெகுதூரத்தில் படைவீரர் நம் எல்லையை காத்து நிற்கிறார். சந்திக்காத மக்கள் மற்றும் பிறந்து வளர்ந்த நாட்டின் அன்பிற்காக தேசத்தின் பாரத்தை தங்களது தோள்களில் சுமந்து நிற்கிறார்கள். அவர்களால் தான் அமைதி நிலவுகிறது, நம் பிள்ளைகள் அமைதியாக உறங்குகிறார்கள், நமது கொடிகள் சுதந்திரமாக பறக்கின்றன.
வீரர்களின் தியாகம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒலிக்கிறது. நாங்கள் வாழும் வாழ்க்கையை, நீங்கள் (படை வீரர்கள்) உயிரை பணயம் வைத்து பாதுகாக்கிறீர்கள். ‛நாங்கள் என்றும் நினைவில் வைத்திருப்போம், நாங்கள் நன்றி கூறுவோம்; எப்போதும்' இதுவே எங்கள் வாக்குறுதி. எங்கள் தாய்நாடு பாதுகாப்பாக இருக்கட்டும். எங்களை பாதுகாக்கும் வீரர்கள், அவர்களின் குடும்பத்தார்கள் அனைவரும் எப்போதும் பெருமையுடன், கண்ணியத்துடன் நடந்து செல்லுங்கள்'' எனக்குறிப்பிட்டுள்ளார்.