டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகர் ரவி மோகனும், பாடகி கெனிஷாவும் நெருங்கி பழகி வந்ததால் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். இந்த நேரத்தில் நேற்று முன்தினம் தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் மகள் திருமணத்தில் பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக வந்திருந்தார் ரவி மோகன். இதையடுத்து அதற்கு எதிராக தனது இணைய பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை போட்டு இருந்தார் ஆர்த்தி.
இந்நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகைகள் ராதிகா, குஷ்பூ ஆகிய இருவரும் தங்களது இணைய பக்கத்தில் பதிவு போட்டுள்ளார்கள். அதில், குஷ்பூ வெளியிட்டுள்ள பதிவில், ஒரு தாயின் உண்மை என்பது வருங்காலத்தில் ஒரு சான்றாக நிற்கும் என்று பதிவிட்டுள்ளார். அதையடுத்து நடிகை ராதிகா, ஆர்த்தி வெளியிட்ட பதிவில், இந்த நேரத்தில் தான் நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று அதற்கான சில எமோஜிகளை பதிவு செய்துள்ளார். இதேபோல் திரையுலகைச் சார்ந்த நடிகைகள் பலரும் ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.




