கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் | 50 ஆண்டு சினிமா பயணம் : ரஜினிக்கு அந்த ஒரு ஏக்கம் மட்டுமே...! | ராம் சரணின் அலைப்பேசி எண்ணை அவர் மனைவி எப்படி பதிந்து வைத்துள்ளார் தெரியுமா? | விவாகரத்து, கேன்சர் : இரண்டு வருட போராட்டத்தில் மம்முட்டியின் கதாநாயகி | பிளஷ்பேக் : குண்டு கல்யாணத்தை தெரியும், குண்டு கருப்பையாவை தெரியுமா? |
'சுப்பிரமணியபுரம்' படம் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானவர் சசிகுமார். தொடர்ந்து கிராமம் சம்பந்தப்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். இடையில் அவருக்கு ஒரு தொய்வு ஏற்பட்டது. அந்தத் தொய்வை 'அயோத்தி' படம் சரி செய்தது. அடுத்து கடந்த வருடம் வெளியான 'கருடன், நந்தன்' ஆகிய படங்களும் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது.
கடந்த வாரம் சசிகுமார் நடித்து வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. இதனால், சசிகுமார் நடித்து வெளியீட்டிற்குத் தாமதமாகி வந்த படங்களை அடுத்தடுத்து வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
'ப்ரீடம், எவிடென்ஸ்' ஆகிய இரண்டு படங்கள் விரைவில் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் எந்தப் படம் முதலில் வரும் என்பது விரைவில் தெரிய வரும்.
'ப்ரீடம்' படத்தை சத்ய சிவா இயக்க சசிகுமார், லிஜோமோள் ஜோஸ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திலும் சசிகுமார் இலங்கைத் தமிழர் ஆகத்தான் நடித்துள்ளார். தற்கொலைப் படை தாக்குதல் பற்றிய கதையாக உருவாகியுள்ளது. இதன் டீசரை கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிட்டிருந்தார்கள்.
'எவிடென்ஸ்' படத்தை ரஞ்சித் மணிகண்டன் இயக்க சசிகுமார், நவீன் சந்திரா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். 'காவல் துறை உங்கள் நண்பன்' படத்தை இயக்கிய ரஞ்சித், இந்தப் படத்தை ஒரு க்ரைம் திரில்லராக உருவாக்கியுள்ளாராம்.
இந்தப் படங்கள் தவிர 'நா நா', என்ற படத்தில் நடித்துள்ளார் சசி. அதன் டீசர் கடந்த வருடம் வெளியானது. 'பகைவனுக்கு அருள்வாய்' என்ற படத்திலும் நடித்துள்ளார். அதன் டீசர் மூன்று வருடங்களுக்கு முன்பே வெளியாகி உள்ளது. இவையும் அடுத்த வெளியீடுகளாக வரலாம்.