மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
சத்ய சிவா இயக்கத்தில், சசிகுமார், லிஜோமோள் ஜோஸ் மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியாக வேண்டிய படம் 'ப்ரீடம்'. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனை காரணமாக படம் நேற்று வெளியாகவில்லை. நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் சுமூக முடிவு எடுக்கப்படவில்லை. அதனால், இன்றும் படம் வெளியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், படத்தை ஒரு வாரத்திற்குத் தள்ளி வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
பைனான்சியரிடமிருந்து தயாரிப்பாளர் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து 5 கோடி வரை வந்துவிட்டதாம். அதில் 2 கோடியாவது தாருங்கள் என பைனான்சியர் தரப்பில் கேட்டதாகத் தகவல். அந்தப் பணத்தையும் தயாரிப்பாளரால் நேற்று ஒரே நாளில் புரட்ட முடியாமல் போயிருக்கிறது. இப்படத்தில் நடித்ததற்காக சசிகுமாருக்குக் கூட அட்வான்ஸ் தவிர்த்து பேசிய மீதித் தொகையைத் தரவில்லையாம். இருந்தாலும் பட வெளியீட்டிற்காக அவர் கூட அந்தப் பணத்தைக் கேட்கவில்லை என்கிறார்கள்.
நல்ல படங்களை மட்டுமே எங்களது நிறுவனத்தில் தயாரிப்போம் என்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருந்தார் தயாரிப்பாளர். சில மோசமான படங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் வெளியாகும் நிலையில், இப்படி ஒரு எண்ணம் கொண்ட தயாரிப்பாளரின் படம் இப்படி சிக்கலில் மாட்டியுள்ளதே என கோலிவுட்டில் வருத்தப்படுகிறார்கள்.