நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சத்யசிவா இயக்கத்தில், சசிகுமார், லிஜோமோள் ஜோஸ் மற்றும் பலர் நடிப்பில் உருவான 'ப்ரீடம்' படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தின் பைனான்ஸ் சிக்கல் காரணமாக இன்று வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். இன்றைக்குள் அந்த சிக்கலை தீர்த்துவிட்டு நாளை படத்தை வெளியிட உள்ளார்கள் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சசிகுமார் நடித்து இதற்கு முன் வெளிவந்த 'டூரிஸ்ட் பேமிலி' படம் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் அடுத்த வெளியீடான இந்த 'ப்ரீடம்' படமும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பே படத்திற்கான பத்திரிகையாளர் காட்சியையும் நடத்தினார்கள். ஆனால், திடீரென அறிவிக்கப்பட்டபடி படத்தை வெளியிட முடியாத நிலை உருவாகி உள்ளது.
பிரபலமான நடிகர்களின் படங்கள் கூட இப்படியான சிக்கலில் மாட்டுவது திரையுலகத்தைப் பொறுத்தவரையில் அதிர்ச்சியான ஒன்றுதான். இருக்கும் சிக்கல்களைத் தீர்த்துவிட்டு பட வெளியீட்டுத் தேதியை அறிவிக்க வேண்டும் என தியேட்டர்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள்.