நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ராஜமவுலி இயக்கத்தில் கீரவாணி இசையமைப்பில், பிரபாஸ், ராணா டகுபதி, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2015 ஜூலை 10ம் தேதி வெளிவந்த படம் 'பாகுபலி'. இந்திய சினிமாவை மட்டுமல்ல உலக சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு திரைப்படம்.
அப்படம் 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று படக்குழுவினர் பலரும் தங்களது நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்கள். இதனிடையே, படக்குழுவினர் நேரில் சந்தித்து ரீ-யூனியன் செய்துள்ளனர்.
தயாரிப்பாளர்கள், இயக்குனர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி, பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டவர்கள் அதில் கலந்து கொண்டுள்ளனர். தமன்னா, அனுஷ்கா ஆகியோர் வரவில்லை. இப்படி ஒரு ரீயூனியனைப் பார்ப்பதற்கு மகிழ்வாக உள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து அக்டோபர் 31ம் தேதி வெளியிட உள்ளார்கள்.