நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் ஒரு படம் கூட இசையமைத்து வெளிவராத ஒரு இசையமைப்பாளருக்கு அடுத்தடுத்து புதிய படங்கள் ஒப்பந்தமாவது திரையுலகினரை மட்டுமல்ல ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அந்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர்.
'கட்சி சேரா, ஆச கூட' இரண்டு ஆல்பங்கள் மூலம் இளைஞர்கள் மனதை சட்டெனக் கவர்ந்தவர் சாய் அபயங்கர். அவரை முதன் முதலில் தான் வழங்கும் 'பென்ஸ்' படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார் லோகேஷ் கனகராஜ். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் அந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். அதற்கடுத்து 'டூட், கருப்பு, சிம்பு 49, அல்லு அர்ஜுன் 22, 'பல்டி' மலையாளப் படம் என அடுத்தடுத்து ஒப்பந்தமானார்.
நேற்று பூஜை நடந்த கார்த்தி நடிக்கும் 'மார்ஷல்' படத்திற்கும் தற்போது இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளார். இவை தவிர சிவகார்த்திகேயனின் 24வது படத்திற்கும் அவர்தான் இசையமைக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இவை தவிர மேலும் சில படங்களுக்கு இசையமைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல். இத்தனை படங்களையும் அவர் எப்படி சமாளித்து பாடல்களை வழங்கப் போகிறார் என ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.