விவாகரத்து, கேன்சர் : இரண்டு வருட போராட்டத்தில் மம்முட்டியின் கதாநாயகி | பிளஷ்பேக் : குண்டு கல்யாணத்தை தெரியும், குண்டு கருப்பையாவை தெரியுமா? | பிளாஷ்பேக் : லலிதா பத்மினிக்காக உருவான நாவல் | ஜெயிலர் 2வில் வசந்த் இருக்கிறாரா? | அக்டோபர் முதல் பிக்பாஸ் சீசன் 9 : இந்தமுறை தொகுத்து வழங்குவது கமல்ஹாசனா? விஜய் சேதுபதியா? | ரூ.151 கோடியைக் கடந்த 'கூலி' முதல்நாள் வசூல் : லியோ சாதனை முறியடிப்பு | இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு காரணம் இதுதான் : கங்கை அமரன் பரபரப்பு பேச்சு | நடிகை கஸ்தூரி பா.ஜ.,வில் இணைந்தார் | ‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி : 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் 'அதிசய' நாயகன் | 33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் |
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான பாலுமகேந்திரா தனது ஆரம்ப காலத்தில் 'அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை' என மென்மையான படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் பரவலாக பாலுமகேந்திராவிற்கு இப்படியான படங்கள்தான் எடுக்க வரும், கமர்ஷியல் படங்கள் வராது என்ற விமர்சனம் இருந்தது.
ஒரு நேர்காணலில் ஒரு பத்திரிகையாளர் இதனை அவரிடம் நேரடியாகவே கேட்டு விட்டார். இதனால் கோபம் அடைந்த பாலுமகேந்திரா நீங்கள் கேட்ட மாதிரி என்னால் கமர்ஷியல் படமும் செய்ய முடியும் என்று சவால் விட்டு உருவான படம்தான் 'நீங்கள் கேட்டவை'. படத்தின் கதை அதற்கு முன்பே பலமுறை படமான சாதாரண கதைதான். அந்த கதையை வேண்டுமென்றேதான் அவர் தேர்வு செய்தார்.
தன் தாயை பலாத்காரம் செய்து கொன்றவர்களை, மகன்கள் வளர்ந்து ஆளாகி பழிவாங்குகிற கதை. ஒரு மகனாக தியாகராஜனும், இன்னொரு மகனாக பானுசந்தரும் நடித்தார்கள். நாயகிகளாக சரிதாவும், அர்ச்சனாவும் நடித்தார்கள். சில்க் ஸ்மிதா கவர்ச்சியான வேடம் ஒன்றில் நடித்தார், இவர்கள் தவிர பூர்ணிமா பாக்யராஜ், வனிதா, பாலன் கே.நாயர் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்தனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. படமும் பெரிய வெற்றி வெற்றது.
ஒரு படத்திற்கு கதையை விட அந்த கதையை எப்படி எடுக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்பதை நிரூபித்த படம். ஒரு சவாலுக்காக இந்த படத்தை இயக்கினாலும், அதன் பிறகு பாலுமகேந்திரா வணிக ரீதியிலான படங்களை இயக்கவில்லை.