ஜி.வி.பிரகாஷ், கயாடு லோகர் நடிக்கும் இம்மார்டல் | பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்த ரவி மோகன் : தந்தை என்பது பெயர் அல்ல பொறுப்பு என ஆர்த்தி ரவி காட்டம் | டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? |
உலக புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம். மத்திய அரசின் பத்மபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். இவர் தமிழ் சினிமா பேசத் தொடங்கிய காலத்தில் இயங்கிய முதல் இயக்குனர் கே.சுப்பிரமணியத்தின் மகள் என்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம். தெரியாத செய்தி, இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் என்பதும், முதல் குழந்தை பாடகி அவர்தான் என்பதும்.
காந்தி மீது மிகுந்த பற்றுக் கொண்ட கே.சுப்பிரமணியம், காந்தி கொள்கையை மையமாக வைத்து பல படங்களை இயக்கினார். அவற்றில் ஒன்று 'கீத காந்தி'. கூட்டுக்குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் பலவித பணிக்கு செல்வார்கள். அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை காந்தி கொள்கைகளை கொண்டு எப்படி தீர்க்கப்படுகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
இந்த படத்தில் அந்த குடும்பத்தின் கடைசி பேத்தியாக தனது மகள் பத்மாவையே நடிக்க வைத்தார் கே.சுப்பிரமணியம். இந்த படத்தில் படு சுட்டிக் குழந்தையாக நடித்த பத்மா படத்தில் ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது. அதோடு அவர் இரண்டு பாடல்களைப் பாடினார், ஒன்று மகாத்மாவைப் பற்றியும் மற்றொன்று தன்னைப் பற்றியும் அவரது லட்சியங்களைப் பற்றியும்.
அந்த பாடலில் 'நாம் நாட்டு நாட்டியத்தை அமெரிக்கா மேடையிலே ஆடி புகழ் அடிக்கப்போறேன்" என்று வரும். இந்த வரியை தனது சொந்த வாழ்க்கையில் பத்மா நிறைவேற்றிக் காட்டினார். அமெரிக்காவில் அவர் கால்கள் நடனமாடாத ஊரே இல்லை என்கிற அளவிற்கு ஆடித் தீர்த்தார். திரைப்படத்தில் ஒரு குழந்தை முதன்முறையாக பாடியது இந்தப் படத்தில்தான். இதற்கு முன் யாரும் பாடியதாக தகவல் இல்லை. அதனால் பத்மாவே முதல் குழந்தை பாடகியாகிறார்.
கீதா காந்தி படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன், பி.எஸ்.சரோஜா, பி.ஏ.பெரியநாயகி, 'பேபி' பத்மா, எம்.ஆர்.எஸ்.மணி, வி.குமாரசாமி, அங்கமுத்து, பண்டிட் போலோநாத் சர்மா, கே.விஸ்வநாதன், உள்பட பலர் நடித்திருந்தனர், லலிதா - பத்மினி நடனமாடி இருந்தனர். ஆனாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பத்மாவும் அதன் பிறகு நடிக்கவில்லை. நடனத்தில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கினார்.