தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி | பிளாஷ்பேக் : நிஜமான குத்துச்சண்டை காட்சி இணைக்கப்பட்ட படம் | காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா? | லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு |
குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ஸ்ரீலீலா, தற்போது அங்கு மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் என முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். இதுதவிர தமிழில் சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தில் நடித்து வரும் அவர், ஹிந்தியில் கார்த்திக் ஆரியனுக்கு ஜோடியாக ஆஷிகி 3 என்ற படத்திலும் நடிக்கிறார். இதன்பிறகு ஹிந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ஒரு படத்தில் இணைகிறார் ஸ்ரீலீலா. இந்த படத்தை ராஜ் சாண்டில்யா இயக்குகிறார். இது தவிர ஹிந்தியில் இன்னும் சில படங்களில் நடிப்பதற்கும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
தெலுங்கில் ஸ்ரீலீலா, நடித்த எக்ஸ்ட்ரா ஆடினரி மேன், ஆதிகேசவா, ஸ்கந்தா போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற நிலையில், கடைசியாக நிதினுக்கு ஜோடியாக அவர் நடித்த ராபின்ஹுட் என்ற படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாகவே அடுத்தபடியாக ஹிந்தியிலும் அழுத்தமாக கால் பதிக்கும் நோக்கத்தில் மும்பையில் முகாமிட்டு புதிய பட வேட்டையில் தீவிரம் காட்டி வருவதாகவும் டோலிவுட் வட்டார தகவல் தெரிவிக்கிறது.