சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' | இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்! | 'கூலி' பட டிக்கெட் கட்டணம் ரூ.500: தியேட்டர்களுக்கு தரப்படும் அழுத்தம்! | மிஷ்கின் என்னை பாப்பா என்று அழைப்பார்! : ஸ்ருதிஹாசன் | ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் |
ஒரே கதை மூன்று மொழிகளில் வெவ்வேறு இயக்குனர்கள், ஹீரோக்கள் இருந்தும் மூன்று மொழிகளிலும் நடித்த நாயகி பானுமதி. படம் அபூர்வ சகோதரர்கள். பிரமாண்ட படங்களை தயாரித்து வந்த ஜெமினி ஸ்டூடியோ மீண்டும் ஒரு பிரமாண்ட படத்தை தயாரிக்க முடிவு செய்து தேர்வு செய்த கதை அலெக்ஸாண்ட்ரே டுமாஸ் எழுதிய நாவலான "தி கோர்சிகன் பிரதர்ஸ்"
வில்லன் ஒரு குடும்பத்தை அழிப்பான். அந்த குடும்பத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் திசைக்கு ஒருவராக தூக்கி வீசப்படுவர்கள். அவர்கள் வளர்ந்து வாலிபனான பிறகு இருவரும் இணைந்து வில்லனை பழிவாங்கும் கதை. இதே கதை பின்னாளில் ஏகப்பட்ட படங்களாக வந்தது.
இந்த படத்தில் எம்.கே.ராதாவும், பானுமதியும் ஜோடியாக நடித்தனர். ஆர்.நாகேந்திர ராவ் வில்லனாக நடித்தார். இவர்கள் தவிர எல்.நாராயண ராவ், ஜி.பட்டு ஐயர், லட்சுமிபிரபா, சூர்யபிரபா மற்றும் 'ஸ்டண்ட்' சோமு ஆகியோர் நடித்தனர். வழக்கறிஞராக இருந்த டி.ஜி.ராகவாச்சாரி (ஆச்சார்யா) இயக்கினார்.
படம் பெரிய வெற்றி பெற்றது. அதனால் தெலுங்கில் 'அபூர்வா சகோதரலு' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதிலும் எம்.கே.ராதா, பானுமதி நடித்தனர். இதே படம் ஹிந்தியில் 'நிஷான்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் ரஞ்சன் ஹீரோவாக நடித்தார். பானுமதி ஹீரோயினாக நடித்தார். மூன்று மொழிகளிலுமே படம் சூப்பர் ஹிட்டானது.