பேய் கதையில் இரண்டு நாயகிகள் | அஜித்துடன் இணைந்த நரேன் கார்த்திகேயன் | பிளாஷ்பேக் : பெரும் வரவேற்பை பெற்ற முக்கோண காதல் கதை | பிளாஷ்பேக்: சிவாஜி நடித்த கேரக்டரில் எம்ஜிஆர் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மக்காமிஷி' | தமிழ்நாடு தி பியுட்டி : சோபிதாவின் டூர் டைரி | தென்னிந்திய நடிகர் மீது தமன்னா குற்றச்சாட்டு | பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? |
உலகம் சுற்றும் வாலிபி என்ற பட்டத்தை நயன்தாராவுக்கு தாராளமாக வழங்கலாம். அடிக்கடி வெளிநாடு செல்வது அவருக்கு பிடித்தமான விஷயம். பல நாடுகளுக்கு அவர் தனியாக காதலனுடன், குழந்தைகளுடன் சென்று வந்துவிட்டார். லேட்டஸ்ட்டாக பாரிஸ் சென்று இருக்கிறார். அந்த போட்டோக்களை வழக்கம்போல் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.
பொதுவாக, கணவருடன், குழந்தைகளுடன் இருக்கும் போட்டோக்களைதான் அவர் அதிகம் பதிவிடுவார். இந்த போட்டோவில் அவர்கள் மிஸ்சிங் என்பதால் சில நெகட்டிவ் கருத்துக்களை பரப்புகிறார்கள்.
மனதளவிலும் சில மாதங்கள் நயன்தாரா சோகத்தில் இருக்கிறாராம். காரணம் அவர் சினிமாவில் வெற்றி படம் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. முன்னணி நடிகர்கள் படங்களிலும் அவரை பார்க்க முடிவதில்லை. பெரும்பாலும் கதையின் நாயகியாகவே நடிக்கிறார். அதனால், இப்போதைக்கு எனக்கு தேவை ஒரு வெற்றி படம். அதற்கேற்ப நல்ல கதை, நல்ல டீம் அமைய வேண்டும். அந்த படத்தை நானே தயாரிக்க ரெடி. உடனடி தேவை வெற்றி என்று தோழிகளிடம் நயன்தாரா பீல் பண்ண வருகிறாராம்.