ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

விஜய்சேதுபதி நடித்துள்ள டிரைன் பட வேலைகளில் படு பிஸியாக இருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். அவரை பலர் நடிக்க அழைத்தாலும் டிரைன் படத்துக்கு நானே இசையமைக்கிறேன். போஸ்ட் புரொடக்சன் வேலைகள் அதிகமாக இருக்கிறது. நடிக்க வாய்ப்பில்லை என்றுசொல்லி வந்தார். இப்படி அவர் நோ சொன்ன படங்களின் எண்ணிக்கை அரை டஜனை தாண்டும்.
இந்நிலையில், துல்கர் சல்மான் நடிக்கும் ‛ஐ அம் கேம்' படத்தில் முக்கியமாக வேடத்தில் நடிக்க மிஷ்கின் ஓகே சொல்லி உள்ளார். இது துல்கர் நடிக்கும் 40வது படம். மலையாளத்தில் ஹிட் அடித்த ஆர்.டி.எக்ஸ் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்குகிறார். தவிர தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் துல்கரே தயாரிக்கிறார். மிஷ்கின் கேரக்டரும் வலுவானதாம். அதனால் இந்த படத்துக்கு ஓகே சொன்னதாக கேள்வி.
இதற்குமுன்பு சூப்பர் டீலக்ஸ், மாவீரன், லியோ, டிராகன் போன்ற படங்களில் மிஷ்கின் நடித்துள்ளார். டிராகன் பட வெற்றிக்கு பின்னரே மிஷ்கினுக்கு நடிக்கிற வாய்ப்பு அதிகமாகி வருகிறது . ஐ அம் கேம் மலையாள படம் என்றாலும் தமிழ் உட்பட பல மொழிகளில் வெளிவர உள்ளது. தமிழ் மார்க்கெட்டுக்காகவே படக்குழு மிஷ்கினை நடிக்க வைப்பதாகவும் தகவல். மலையாளத்தில் நடிகராக மிஷ்கின் அறிமுகமாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.




