நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
தூத்துக்குடியை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரும், சுதேசி இயக்கத்தின் முன்னோடியுமான வ.உ.சிதம்பரம்-ன் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் "நாவாய்" என்ற புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. அரன் நிறுவனம் தயாரிக்க, பார்கவன் சோழன் இயக்குகிறார்.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக இப்படம் இருக்கும் என தெரிவித்துள்ளனர். கதாபாத்திரங்களின் உருவாக்கம், காலப்பிரதேச அமைப்புகள், பழங்கால சூழ்நிலை கட்டமைப்புகள் என அனைத்தும் ஏஐ மூலம் உருவாக்கி, வரலாற்று தகவல்களை மையமாக கொண்டு இப்படம் உருவாவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மதுரை ஆதினம் வெளியிட்டார்.