சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சந்தானம், கீத்திகா, கவுதம் மேனன், செல்வராகவன், ராஜேந்திரன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது.
'தில்லுக்கு துட்டு' என்பதுதான் பின்னர் இரண்டாம் பாகமாக 'தில்லுக்கு துட்டு 2' என வெளிவந்தது. அதன்பின் அந்தத் தலைப்புக்கு ஏதோ பிரச்னை வந்ததால், 'டிடி ரிட்டர்ன்ஸ்' என அதன் தொடர்ச்சியாக மூன்றாம் பாகத்திற்குத் தலைப்பு வைத்தார்கள்.
இப்போது 'டிடி' என்பதற்கும் பிரச்னை போல, அதனால், 'டிடி நெக்ஸ்ட் லெவல்' என்பதை 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' என ஹாலிவுட் படம் போல பெயர் வைத்திருக்கிறார்கள். பெயரில்தான் ஹாலிவுட் என்று பார்த்தால் இன்று வெளியான டிரைலரிலும் ஒரு ஹாலிவுட் தோற்றம் இருக்கத்தான் செய்கிறது. சந்தானம், ராஜேந்திரன் இருவரும் நிறைந்துள்ள டிரைலர் 'டபுள் காமெடி' இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.
கவுதம் மேனன், செல்வராகவன், கீத்திகா, யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி, மாறன் என வரும் கதாபாத்திரங்கள் அனைத்துமே காமெடி கலந்து உருவாக்கப்பட்டுள்ளது.
அதிலும் டிரைலரின் முடிவில் கவுதம் மேனனையே அவர் இயக்கிய 'காக்க காக்க' படத்தின் 'உயிரின் உயிரே' பாடலுக்கு யாஷிகாவுடன் கடற்கரையில் ஓட விட்டிருப்பது அல்டிமேட் ஆக உள்ளது. தன் படத்தை கலாய்த்து பாடல் எடுத்ததை கவுதமும் ஏற்றுக் கொண்டு நடித்தது ஆச்சரியம்தான்.