ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி |
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, மற்ற மொழி சினிமாவிலும் முன்னணி கதாநாயகர்களுக்கான சம்பளம் மிக அதிகமாக உள்ளது. தமிழில் சில நடிகர்கள் 100 கோடிக்கும் அதிகமாக ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குகிறார்கள். ஓரிரு நடிகர்கள் 200 கோடிக்கும் அதிகமாக வாங்குவதாக ஒரு தகவல் உண்டு. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாது.
கதாநாயகர்களுக்கு 100 கோடிகளுக்கு மேல் சம்பளம் கொடுக்கத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள் கதாநாயகியருக்கு அதில் பத்தில் ஒரு பகுதியைக் கொடுக்கத் தயங்குவது வழக்கமாக உள்ளது. ஒன்று கதாநாயகர்களுக்கு சம்பளத்தைக் குறைக்க வேண்டும், அல்லது கதாநாயகிகளுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும். ஆனால், அது இரண்டுமே நடக்காது. மாறாக கதாநாயகிகள் மிக அதிக சம்பளம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை திரையுலகில் முன் வைக்கிறார்கள்.
கதாநாயகனுக்கு இணையாக கதாநாயகியருக்கும் படத்தில் காட்சிகள் உண்டு. சில கதாநாயகிகளை கிளாமர் காட்ட வேண்டும் என்ற ஒரு கட்டாயத்தில் ஒப்பந்தம் செய்வதும் நடக்கிறது. ஒரு ஆணாதிக்க மனோபாவத்தில்தான் திரையுலகம் இயங்குவதாக சில கதாநாயகிகளும் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.
தற்போது தெலுங்குத் திரையுலகத்திலிருந்து ஒரு தகவல் பரவி வருகிறது. அது சிரஞ்சீவி அடுத்து நடிக்க உள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா 20 கோடி வரை சம்பளம் கேட்கிறார் என்பதுதான் அது. அப்படத்தில் நடிக்க சிரஞ்சீவிக்கு 100 கோடிக்கும் அதிகமான சம்பளம் என்கிறார்கள். நயன்தாரா அதிக சம்பளம் கேட்பதால் அவருக்குப் பதிலாக சுமார் 10 கோடி வரையில் சம்பளம் கேட்கும் கதாநாயகியைத் தேடி வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
நயன்தரா என்பதால் இப்படியான தகவல் பரவுகிறதா என்ற கேள்வியும் ஒரு பக்கம் வருகிறது.