'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | வார் 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகள் | 'ரட்சகன்' பார்த்து நாகார்ஜுனா ரசிகரான லோகேஷ் கனகராஜ் | ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ |
ஷங்கர் இயக்கத்தில் தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் இந்த வருட சங்கராந்திக்கு வெளிவந்த தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படம் தெலுங்கில் கூட வரவேற்பையும், வசூலையும் பெறவில்லை. கடந்த வருடம் 'இந்தியன் 2', இந்த வருடம் 'கேம் சேஞ்ஜர்' என அடுத்தடுத்து படுதோல்விகளைத் தழுவினார் ஷங்கர். அது தமிழ்த் திரையுலகத்தில் உள்ள பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது.
'கேம் சேஞ்ஜர்' படத்திற்குக் கதை எழுதியது இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். அதற்காக அவருக்கு சில கோடிகள் சம்பளமாக வழங்கப்பட்டது என்றும் கூட தகவல் உண்டு. பொதுவாக கதைகளுக்கென லட்சங்களில்தான் சம்பளம் வழங்கப்படும்.
கார்த்திக் சுப்பராஜ் தற்போது இயக்கி மே 1ம் தேதி வெளிவர உள்ள படம் 'ரெட்ரோ'. அதற்கான புரமோஷன் வீடியோ ஒன்றில் பேசுகையில் 'கேம் சேஞ்சர்' குறித்தும் பேசியுள்ளார்.
“கேம் சேஞ்ஜர்' படத்திற்காக நான் ஒன் லைனில் ஒரு கதை கொடுத்தேன். ஒரு நியாயமான ஐஎஎஸ் ஆபீசர், அரசியல்வாதியாக ஆவது பற்றிய கதை அது. ஷங்கர் சாரிடம் படத்தின் கதையைக் கொடுத்த பின், அது எப்படி பிரம்மாண்டமாக உருவாகப் போகிறது என்ற ஆர்வத்தில் இருந்தேன். அப்படிப்பட்ட உலகம்தான் அவரைப் பற்றிய எனது பார்வை. ஆனால், 'கேம் சேஞ்ஜர்' பொறுத்தவரையில் வேறு உலகமாகிப் போனது.
நிறைய பேர், நிறைய எழுத்தாளர்கள். திரைக்கதை மொத்தமாக மாறிப் போனது. கதையும் கொஞ்சம் மாறியது. இருந்தாலும் ஒரு படத்தில் எது சிறப்பான பலனைத் தந்தது, ஒரு படம் எதனால் ரசிகர்களைக் கவர முடியாமல் போனது என்பதைச் சொல்லவே முடியாது,” என்று பேசியுள்ளார்.
இப்போது 'கேம் சேஞ்ஜர்' தோல்வி குறித்த தனது 'கதையை' மாற்றிப் பேசியுள்ள கார்த்திக் சுப்பராஜ், 'கேம் சேஞ்ஜர்' படம் வெளி வந்த மறுநாளே, “கேம் சேஞ்ஜர்' படம் 'வின்டேஜ்' ஷங்கர் சாரின் பிரம்மாண்டமான அதிரடி காட்சிகள் மற்றும் அரசியல் பன்ச்களுடன் கூடிய ரசிகர்களுக்கான மிகவும் ரசிக்கத்தக்க படமாக இருந்தது. உங்கள் பெரிய தொலைநோக்குப் பார்வையில் என்னையும் ஒரு சிறிய பகுதியாக அனுமதித்ததற்கு நன்றி ஷங்கர் சார்,” என எக்ஸ் தளத்தில் பாராட்டிப் பதிவிட்டிருந்தார்.
அன்று ஷங்கரைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ், இன்று 'ஒன் லைன், நிறைய பேர், நிறைய எழுத்தாளர்கள், கதையே மாறியது” என இவரும் கதையை மாற்றிப் பேசுவது ரசிகர்கள் 'டிரோல்'களுக்கு ஆளாகியுள்ளது.