காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! | 52வது திருமணநாளில் மனைவி ஷோபாவுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்த இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர்! | கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் நானி! | 25வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய அஜித்குமார் - ஷாலினி! | பிளாஷ்பேக் : திமுகவுக்காக தலைப்பை மாற்றியதால் தன் பட தலைப்பை கொடுத்த எம்ஜிஆர் | பஹல்காம் தாக்குதலை திசை திருப்பாதீர்கள்: ஆண்ட்ரியா வேண்டுகோள் | திரைப்படக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய 'கீனோ' | பிளாஷ்பேக் : தியாகராஜ பாகவதரை காப்பாற்ற முயன்ற திரையுலகம் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் ஏப்ரல் 10ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அஜித் ரசிகர்களுக்குப் படம் பிடித்துப் போனது. அதனால், அஜித் நடித்து வெளியான படங்களில் அதிக வசூலைப் பெற்ற படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதற்கு முன்பு அந்த சாதனையைத் தக்க வைத்திருந்த படம் 'விஸ்வாசம்'. தற்போது 'குட் பேட் அக்லி' படத்தின் வசூல் 230 கோடியைக் கடந்திருக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 130 கோடி வசூல் கடந்திருக்கலாம் என்கிறார்கள்.
இவ்வளவு வசூல் என்றாலும் வியாபாரத்தின் அடிப்படையில் படத்திற்கான 'பிரேக் ஈவன்' இன்னும் நடைபெறவில்லை என்ற ஒரு தகவலும் கோலிவுட் வட்டாரங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. மே 1ம் தேதி வரை பெரிய படங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் இந்த வார இறுதியிலும் 'குட் பேட் அக்லி'க்கான வசூல் திருப்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய லாபம் இல்லை என்றாலும் மிதமான லாபத்துடன் படத்தின் ஓட்டம் நிறைவடையும் என்கிறார்கள்.