டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகரான ஷைன் டாம் சாக்கோ, தமிழில் பீஸ்ட், சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் சூத்ரவாக்கியம் என்கிற படத்தில் நடித்தபோது போதை பொருளை உட்கொண்டதுடன் படத்தின் கதாநாயகி வின்சி அலோசியஸ் என்பவரிடம் படப்பிடிப்பு சமயத்தில் அநாகரிமான வார்த்தைகளில் பேசி அத்துமீற முயற்சி செய்துள்ளார். இதனை தொடர்ந்து மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் வின்சி அலோசியஸ் புகார் செய்தார்.
சமீபத்தில் கைதான போதை மருந்து கடத்தல் கும்பல் ஒன்று ஷைன் டாம் சாக்கோவிற்கு போதை பொருள் சப்ளை செய்து வருவதாக ஏற்கனவே கூறியிருந்த நிலையில் அது தொடர்பாக சமீபத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் ஷைன் டாம் சாக்கோ. இந்த நிலையில் மீண்டும் நடிகை சம்பந்தமான புகாரில் மலையாள திரையுலகில் இந்த புகார்களை விசாரிக்கும் 'உள் புகார்கள் குழு' இருவரையும் நேரில் வரவழைத்து ஒரே சமயத்தில் விசாரித்தது. நடிகை வின்சி அலோசியஸ் தனியாக வந்திருந்தார். நடிகை ஷைன் டாம் சாக்கோ தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார்.
விசாரணையின் போது பேசிய ஷைன் டாம் சாக்கோ, “நான் எந்தவித உள் நோக்கத்துடனும் அப்படி பேசவில்லை. என்னுடைய இயல்பான பேசும் பாணியே அப்படித்தான். ஆனால் இனிமேல் இதுபோன்று நடக்காமல் நான் பார்த்துக் கொள்வேன். இதற்காக நடிகை வின்சி அலோசியஸிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து உள் புகார் குழு எந்த முடிவு எடுத்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு வின்சி அலோசியஸ் கிளம்பி சென்றார் இந்த விசாரணையின் அறிக்கையை நடிகர் சங்கத்திடம் ஒப்படைக்க இருக்கின்றனர். இறுதி முடிவு நடிகர் சங்கத்தில் தான் எடுக்கப்பட இருக்கிறது
நடிகை வின்சி அலோசியஸின் புகார் காவல்துறை வரை செல்லாததால் இன்னும் சில நாட்களில் நடிகர் சங்கத்திலேயே இந்த பிரச்சனை சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டு விடும் என்று தெரிகிறது அதேசமயம் ஷைன் டாம் சாக்கோ மீது போலீசார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பதிந்துள்ள வழக்கு வழக்கம் போல தொடரும் என சொல்லப்படுகிறது.




