பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் | ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு | ஆயிரம் கோடி வசூல் கனவு…. காத்திருக்கும் தமிழ் சினிமா…. | என்டிஆர் - நீல் படப்பிடிப்பு ஆரம்பம்: 'சலார், கேஜிஎப் 3' நடக்குமா? | 'வின்னர், கிரி' - காமெடியை மீண்டும் தருமா 'கேங்கர்ஸ்' கூட்டணி | இளையராஜா பாடலால் 'குட் பேட் அக்லி' ஹிட்டானதா?: கங்கை அமரன் பேச்சுக்கு மகன் பிரேம்ஜி சொன்னது என்ன? | உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் |
நயன்தாரா தனது வாழ்க்கை வீடியோவில் 'நானும் ரவுடி தான்' படத்தில் இடம்பெற்ற காட்சிகளை பயன்படுத்த நினைத்தார். அதற்கு உரிய அனுமதி தயாரிப்பாளர் தனுஷிடமிருந்து கிடைக்காததால் மேக்கிங் வீடியோவில் இருந்து சில காட்சிகளை பயன்படுத்தினார். அதற்கே இப்போது கோர்ட்டுக்கு அலைகிறார். எத்தனையோ படங்கள் இருக்கையில் நயன்தாரா ஏன் 'நானும் ரவுடி தான்' படத்திற்கு இப்படி போராடினார் என்றால். இந்த படத்தில் நடிக்கும்போதுதான் அவருக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இந்த படத்தின் காட்சிகளோடு அவர்களின் நிஜ காதலும் கலந்திருப்பதால் அது அவருக்கு முக்கியமான படமானது.
அதே போலத்தான் மக்கள் திலகம் எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகிக்கு 'மோகினி' படம் முக்கியமானதாக இருந்தது. எம்ஜிஆரும், ஜானகியும் இணைந்து காதலர்களாக நடித்த படம் 'மோகினி', அதோடு இருவரும் இந்த படத்தில் நடித்தபோதுதான் காதல் வயப்பட்டார்கள். எம்ஜி ஆர் மறைந்து, ஜானகி முதல்வரானபோது 'மோகினி' படத்தை மீண்டும் எடிட் செய்து, அதனை வண்ணகலரில் வெளியிட விரும்பினார். இதற்கான பட்ஜெட் அதிகம் என்றாலும் அதை வெளியிட தீவிர முயற்சி செய்தார்.
இந்த நிலையில் ஆட்சி கவிழ்ந்து அவர் தேர்தலை சந்தித்தபோது டிரிம் செய்யப்பட்ட படத்தை கருப்பு, வெள்ளையாகவே வெளியிட்டனர். ஜானகியின் இமேஜை உயர்த்துவதற்காக இதனை செய்தனர். தேர்தலில் ஜானகி தோற்று ஆட்சியை பறிகொடுத்ததோடு, கட்சியையும் ஜெயலலிதாவிடம் கொடுத்து விட்டு விலகியதால், அவரது காதல் மோகினியை வண்ணமாக்கும் முயற்சி நிறைவேறவே இல்லை.