புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லியில் கூட முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் போதைப்பொருள் சோதனையின்போது பிடிபட்ட பெண் ஒருவர் ஷைன் டாம் சாக்கோவுக்கு ரெகுலராக போதை பொருள் சப்ளை செய்து வருவதாக குறிப்பிட்டு இருந்தார்.
மலையாள நடிகை வின்சி அலோசியஸ் என்பவர் சாக்கோ படப்பிடிப்பில் போதைப் பொருள் பயன்படுத்தினார் என்றும் அதை தொடர்ந்து தன்னிடம் அத்துமீறி நடக்க முயற்சித்தார் என்றும் நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் அவரை போலீசார் விசாரிக்க தேடிய போது, தான் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து தலைமறைவானார். அதன் பிறகு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் சனிக்கிழமை காலை போலீசாரின் விசாரணைக்கு ஆஜரானார். கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் மலையாள திரையுலகில் பலரும் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும் தன்னை குறி வைத்து இப்படி குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அவர் நீதிமன்றத்தில் இந்த புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என வழக்கு தொடர போவதாகவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அது மட்டுமல்ல இப்படி அவர் போதை பொருள் பயன்படுத்தினாரா என்பதற்கான சோதனையை அவர் மீது நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆனால் முன்னெச்சரிக்கையாக போதைப்பொருள் உடலில் கலந்திருப்பதை முறிக்கும் விதமான எதிர் மருந்தை ஒரு வேலை ஷைன் டாம் சாக்கோ எடுத்திருந்தால் மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரிய வராது என்றும் அதன் மூலம் இந்த வழக்கு நிற்காது என்றும் போலீசார் தரப்பில் ஒரு புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாம்.
அதேசமயம் சாக்கோவின் பண பரிமாற்றத்தை பரிசோதனை செய்தபோது அதில் கடைகளுக்கோ அல்லது பொருள்கள் வாங்குவதற்கோ அல்லாமல் தனி நபர்களுக்கு 2000 முதல் 5000 ரூபாய் வரை அவ்வப்போது அனுப்பப்பட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஒருவேளை இதை போதைப்பொருள் வாங்குவதற்காக அவர் பயன்படுத்தியுள்ளாரா என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் எனது நண்பர்களின் தேவைகளுக்காகவும் அவர்கள் அவ்வப்போது வாங்கும் சில கடன்களை அடைப்பதற்கு ஆகவும் நான் இப்படி பணம் அனுப்பி உதவி செய்வது உண்டு என்று ஷைன் டாம் சாக்கோ கூறியுள்ளாராம்.