டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

'சுப்பிரமணியபுரம்' படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் சசிகுமார். குழந்தைத்தனமான முகத்தோற்றம், மதுரை தமிழ் என கவனிக்க வைத்தார். 'நாடோடிகள்' படத்திற்கு பிறகு 'நட்புக்காக' இமேஜும் சேர்ந்து கொண்டது. சில சொந்த படங்கள் தயாரித்த வகையில் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தார். அந்த நேரத்தில் கொரோனா தொற்றும் வந்ததால் சென்னையை காலி செய்து விட்டு மதுரையிலேயே குடியேறி விட்டார்.
தற்போது அவர் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் மதுரையிலேயே குடியிருக்கிறார். படப்பிடிப்பு எங்கே என்று சொன்னால் மதுரையில் இருந்து நேராக அங்கு வந்து விடுவார் படப்பிடிப்பு முடிந்ததும் மதுரை திரும்பி விடுவார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் ஒரு மலையாளப் படத்தில் நடித்தேன். அப்போது மலையாள நடிகர்களை கவனித்தேன். எல்லோருமே அவரவர் சொந்த ஊரில் இருந்து நடிக்க வருகிறார்கள், படப்பிடிப்பு முடிந்ததும் சொந்த ஊருக்கே திரும்பி விடுகிறார்கள். சொந்த ஊரில் விவசாயியாக, வியாபாரியாக, சமூக சேவகராக இன்னொரு முகத்துடன் வாழ்கிறார்கள். இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
பிறகு ஏன் நாம் மட்டும் சென்னையிலேயே இருக்கிறோம், நம்ம மண், நம்ம ஊர் என்று கிராமத்திலேயே வாழத் தோன்றியது. சினிமாவை வீட்டுக்குக் கொண்டு வருவதில்லை. இங்கே சினிமா சம்பந்தமாக யாரையும் சந்திக்கிறதில்லை. ஷூட்டிங் இல்லையென்றால் விவசாயம் செய்து கொண்டு கிராமத்து ஆள் மாதிரியே இருக்கிறேன்.
எங்க ஊரில் யாரும் என்னோடு செல்பி எடுத்துக் கொள்வதில்லை. ரோட்டில் நடந்து கடைக்குப் போவேன். சைக்கிளில் போவேன். வீட்டுக்கு வெளியே நிற்கிறேன். என்னை மாமா, மச்சான்னு கூப்பிட்டுப் பேசுறாங்க. சினிமா நிரந்தரம் இல்லை . சினிமா ஆண்டாண்டு காலமாக அப்படியே அழியாமல் இருக்கும். ஆனால் சினிமாவுக்கு வருகிற நடிகர்கள் ஒவ்வொரு தடவையும் மாறிக்கிட்டே இருக்காங்க.
சினிமாவிற்கு வருகிற யாரும் நிரந்தரம் இல்லை. சினிமாக்காரனா பெரிய ஆளுன்னு நினைத்துத் தலைக்கனம் வந்திடாமல் இருக்க இந்த வாழ்க்கை உதவுகிறது. கிராமத்து மக்களும் என்னை ஒரு சாதாரண ஆளாக இருக்கவிடுறாங்க. இந்த அமைதியை, கூட்டுக் குடும்பமாக இருக்கிறதைத் தொலைக்கவே கூடாதுன்னு நினைக்கிறேன்.
இவ்வாறு சசிகுமார் கூறியுள்ளார்.




