ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய திரையுலகில் வெளியான சில படங்கள் 1000 கோடி வசூலைக் கடந்து சாதனை புரிந்துள்ளன. தமிழ் சினிமாவில் 1000 கோடி வசூல் என்பது இன்னும் கனவாகவே உள்ளது. விரைவில் அந்த சாதனையையும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாள சினிமா உலகம் சிறியது என்பதால் அங்கு 100 கோடி வசூல் என்பதே சில வருடங்களுக்கு முன்பு வரை பெரிய கனவாக இருந்தது. அந்த சாதனையை மோகன்லால் நடிப்பில் வெளிவந்த 'புலி முருகன்' படம் 2016ல் செய்து காட்டியது. அதன்பின் “லூசிபர், 2018, ஆவேஷம், ஏஆர்எம், மார்கோ, பிரேமலு, த கோட் லைப்' ஆகிய படங்கள் 100 கோடி வசூலைப் பெற்றன.
மலையாள சினிமாவின் முதல் 200 கோடி படம் என்ற வசூலை கடந்த வருடம் வெளிவந்த 'மஞ்சும்மேல் பாய்ஸ்' திரைப்படம் பெற்றது. 240 கோடி வசூலித்த, அந்த சாதனையை ஒரு வருடம் மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடிந்துள்ளது.
கடந்த வாரம் வெளிவந்த மோகன்லால் நடித்த 'எல் 2 எம்புரான்' படம் தற்போது 250 கோடி வசூலைக் கடந்து அந்தச தனையை முறியடித்துவிட்டது. எப்படியும் இன்னும் 50 கோடி வசூலித்து 300 கோடி வசூலைக் கடந்து முதல் 300 கோடி படம் என்ற புதிய சாதனையைப் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு மலையாள ரசிகர்களிடம் எழுந்துள்ளது.