அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
சென்னையில் சிட் பண்ட் நிறுவனத்தை நடத்தி வரும் நிறுவனம், ஸ்ரீ கோகுலம் சினிமாஸ் என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு தொழிலிலும் ஈடுபட்டு வருகிறது. மலையாளத் திரையுலகத்தில் அந்நிறுவனத்தின முதலீடுகள் அதிகம். சமீபத்தில் வெளியான மலையாளத் திரைப்படமான 'எம்புரான்' படத்தின் பங்குதாரராக கடைசி நேரத்தில் சேர்ந்தது.
இந்நிலையில் கோகுலம் நிறுவனத்தின் தலைவர் கோகுலம் கோபாலன் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள, கோகுலம் சிட் அண்டு பைனான்ஸ் குழுமத்தின் தலைமை அலுவலகம் மற்றும் சென்னை நீலாங்கரையில் உள்ள கோகுலம் கோபாலன் வீடு உட்பட, ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 05) அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோகுலம் சிட்பண்ட்ஸ் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 4ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த பணம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.