2015ம் ஆண்டில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்து வெளிவந்த 'டிமான்டி காலனி' படத்தின் வெற்றிக்குப் பிறகு கடந்த ஆண்டு அஜய் ஞானமுத்து, அருள்நிதி கூட்டணியில் அதன் 2வது பாகமாக வெளிவந்த 'டிமான்டி காலனி 2' படமும் மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் அஜய் ஞானமுத்து அவரின் உதவி இயக்குநர்களுடன் ஐரோப் நாட்டில் உள்ள மல்டா நகரில் டிமான்டி காலனி மூன்றாம் பாகத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.