அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கடந்த 2015ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கிய படம் டிமான்டி காலனி. இந்த படம் வெற்றி பெற்ற நிலையில், அதன் பிறகு இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கினார் அஜய் ஞானமுத்து. பின்னர் டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். அந்த படம் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 80 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே டிமான்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தை தொடங்கி இருக்கிறார் அஜய் ஞானமுத்து. முதல் இரண்டு பாகங்களிலும் நடித்த அருள் நிதியே இந்த படத்திலும் நடிக்கிறார். நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.