அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
விஜய் நடித்த லியோ படத்தை அடுத்து ரஜினி நடிப்பில் கூலி என்ற படத்தை இயக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். இதில் ரஜினியுடன் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், கெஸ்ட் ரோலில் அமீர்கான் என முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தை ஆயிரம் கோடி வசூல் கிளப்பில் இணைத்து விட வேண்டும் என்பதற்காக உலக அளவில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛இதுவரை நான் பல படங்களை இயக்கியிருந்த போதும், இந்த கூலி படத்தை இயக்கும்போது கவனம் சிதறக்கூடாது என்பதற்காக சோசியல் மீடியாவில் இருந்துகூட வெளியேறினேன். இரு ஆண்டுகளாக கூலி படத்திற்காக மட்டுமே உழைத்தேன். அந்த அளவுக்கு சிறந்த படமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக கடுமையான உழைப்பை போட்டு உள்ளேன். அந்த கடின உழைப்பு இப்போது படத்தில் தெரிகிறது'' என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.