டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

டிமான்டி காலனி படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் அஜய் ஞானமுத்து. முதல் படத்தையே ஹாரர் திரில்லராக கொடுத்து வெற்றி பெற்றார். தொடர்ந்து நயன்தாரா, அதர்வா நடிப்பில் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கினார். இந்த படமும் வெற்றி பெற்றது. அடுத்து விக்ரமை வைத்து கோப்ரா படத்தை எடுத்தார். இந்த படம் தோல்வியை தழுவியது. இதையடுத்து தனக்கு முதல் வெற்றியை தந்த டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். கடந்தாண்டு வெளியான இப்படம் வெற்றி படமாக அமைந்தது.
இந்நிலையில் அஜய் ஞானமுத்து திருமணம் செய்துள்ளார். இவர் நீண்டகாலமாக சிமோனா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் சம்மதம் கிடைத்த நிலையில் சென்னையில் இவர்களின் திருமணம் கிறிஸ்துவ முறைப்படி கோலாகலமாய் நடந்தது. நடிகர் விக்ரம் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் மணமக்களுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.