இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
இயக்கம் தாண்டி நடிகராகவும் பயணித்து வருகிறார் கவுதம் மேனன். தற்போது மலையாளத்தில் மம்முட்டியை வைத்து டொமினிக் என்ற படத்தை இயக்கியுள்ளார். படம் இந்தவாரம் வெளியாக உள்ள நிலையில் இதற்கான புரொமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் கவுதம் மேனன்.
அவரிடம் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் கூறியதாவது, "தமிழில் அடுத்து வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெற்றிமாறன் கதையில் ஒரு படத்தை இயக்கவுள்ளேன். இதில் கதாநாயகனாக ரவி மோகன் நடிக்கிறார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது'' என தெரிவித்துள்ளார்.